காத்தான்குடித் தாக்குதல் 1990
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை என்பது ஆகஸ்ட் 3, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் ஆயுதக்குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.[1]. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[2][3] இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனாலும் அவர்கள் இதனை எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.[4], முஸ்லிம் ஊர்காவல் படையினர் நடத்திய படுகொலைகளுக்கான எதிர்வினையாகவே இவை நடாத்த பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த தாக்குதல் ஆகஸ்ட் 1, 1990ல் அக்கரைப்பற்றில் நடைத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. அக்கரைப்பற்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 முஸ்லிம்களும், 2 தியதி மதவாச்சி, மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம் ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர்.[2] இத்தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இத்தாக்குதலை துன்பியல் சம்பவம் என்று பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் பேசுபவர்களாக இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலமுறை தாக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.[5][6][7] [8] இவற்றையும் பார்க்காவும்வெளி இணைப்புகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia