கான்சு
கான்சு (Gansu எளிய சீனம்: 甘肃; மரபுவழிச் சீனம்: 甘肅; பின்யின்: ⓘ) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த, நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. கான்சு மாகாணத்தில் 26 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் (2009 கணக்கெடுப்பின்படி) இந்த மாகாணம் 425,800 சதுர கிலோமீட்டர் (164,400 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள லாண்சூ இதன் தலைநகராகும். இது திபெத் பீடபூமி மற்றும் உவாங்டு பீடபூமி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக மங்கோலியா, உள் மங்கோலியா, நிங்ஜியா ஆகியவை வடக்கிலும், சிஞ்சியாங், மற்றும் சிங்காய் மாகாணங்கள் மேற்கிலும் சிச்சுவான் தெற்கிலும், ஷான்சி மாகாணங்கள் கிழக்கேயும் உள்ளன. மஞ்சள் ஆறு மாகாணத்தின் தெற்கு பகுதியின் வழியாக செல்கிறது. பெயர்கான்சு என்பதன் சுருக்கம் 甘 "(Gan) அல்லது" 陇 "(Lǒng), இதன் பொருள் நீண்ட மேற்கு அல்லது நீண்ட வலது என்பது. கான்சுவின் கிழக்கில் உள்ள நீண்ட மலையினால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. வரலாறுசுயி அரசமரபு மற்றும் தாங் அரசமரபு ஆண்ட மாவட்டங்களான கான் மற்றும் சு என்பவற்றைச் சேர்த்து கான்சு என்ற கூட்டுப்பெயர் முதன் முதலில் சொங் அரசமரபு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், கான்சு புதிய கற்கால பண்பாட்டுக்கு உட்பட்டிருந்தது. இங்கு கி.மு. 6000 முதல் கி.மு.3000 காலகட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொல்பொருட்கள், குறிப்பிடத்தக்க கைவினைப்பொருட்கள் போன்றவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.[4] மஜியாவோ நாகரீகம் மற்றும் குய்ஜியா நாகரீகத்தின் ஒரு பகுதி ஆகியன முறையே கி.மு. 3100 இருந்து கி.மு. 2700 வரையும் மற்றும் கி.மு. 2400 முதல் கி.மு 1900 வரையும் கான்சு பகுதியில் வேரூன்றி இருந்தது. நிலவியல்கான்சு 454,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (175,000 சதுர மைல்) உள்ளது. இதன் பரந்த நிலப்பரப்பின் பெரும்பாலானவை கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டருக்கு (3,300 அடி) மேற்பட்ட உயரத்தில், திபெத் பீடபூமி மற்றும் லோயிசு பீடபூமி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சீனக்குடியரசின் புவியியல் மையமும் அதன் நினைவுச்சின்னமும் 35°50′40.9″N 103°27′7.5″E / 35.844694°N 103.452083°E என்ற ஆள்கூறில் அமைந்துள்ளன.[5] கோபி பாலைவனத்தின் ஒரு பகுதி இந்த மாகாணத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அதே போல் பாதான் ஜரன் பலைவனம், மற்றும் தெங்கர் பாலைவனம் ஆகியவற்றின் சிறிய பகுதிகள் மாகாணத்தில் அமைந்துள்ளன. இப்பகுதியிலிருந்து பெருமளவு நீரைப்பெறும் மஞ்சள் ஆறு கன்சு மாகாணத்தின் தென்பகுதியில் பாய்கிறது.[6] கான்சு மாகாணம் தெற்கில் மலைசார்ந்ததாகவும் வடக்கில் சமவெளியாகவும் உள்ளது. தெற்கில் கிலியான் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. தூரமேற்கு பகுதியான அல்டின்-டாக் என்ற பகுதியில் மாகாணத்தின் உயரமான பகுதி உள்ளது. இதன் உயரம் 5,830 மீட்டர் (19,130 அடி) ஆகும். கான்சு பாதி வறண்ட மற்றும் வறண்ட தட்பவெப்பநிலை கொண்ட பகுதியாகும். கோடைக்காலத்தில் வெப்பமாகவும், குளிர்காலத்தில் மிகவும் குளிர்ந்த காலநிலையையும் கொண்டதாக இருக்கும். குளிர்காலத்தில் பகலிரவு வெப்பநிலை 0 பாகை செல்சியஸ் (32 ° ஃபா) வரை குறையும். எனினும், கான்சுவின் அதிக உயரமான சில பகுதிகளில், ஆர்க்டிக் துணைப்பகுதி காலநிலை போன்று குளிர்காலத்தில் வெப்பநிலை சில நேரங்களில் குறைந்தபட்சம் -40 °C (-40 ° பாரங்கீட்) வரை நிலவும். பாலைவனமாக்கல் தடுப்பு திட்டம்கான்சு மாகாணத்தில் நிலவளம் குறைவதையும் பாலைவனமாவதையும் தடுக்கும்நோக்கில் ஆசிய வளர்ச்சி வங்கி சீனநாட்டின் காடுகள் மேலாண்மைத்துறையுடன் பட்டுச்சாலை சூழ்மண்டல மறுசீரமைப்பு என்ற திட்டத்தை வடிவமைத்தது. இத்திட்டத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரம்கான்சு மாகாணத்தில் தினை, கோதுமை, பருத்தி, ஆளி விதை எண்ணெய், சோளம், முலாம்பழம் போன்ற வேளாண்பொருட்கள் முதன்மையாக விளைகின்றன. கான்சு பொருளாதாரத்தின் மிக அடிப்படையாக சுரங்கம் மற்றும் கனிமங்களை பிரித்தெடுத்தல் தொழில் உள்ளது. குறிப்பாக இம்மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவு அந்திமனி, குரோமியம், நிலக்கரி, கோபால்ட், தாமிரம், ஃப்லுரைட், ஜிப்சம், இரிடியம், இரும்பு, ஈயம், சுண்ணக்கல், பாதரசம், மிரபில்ட், நிக்கல், கச்சா எண்ணெய், பிளாட்டினம், டிரோய்லிட், டங்ஸ்டன், துத்தநாகம் போன்ற படுவுகள் உள்ளன. சீனாவிலுள்ள பெரும்பாலான நிக்கல் படுவுகளைக் கொண்டுள்ள கான்சு மாகாணம் சீனாவின் மொத்த நிக்கல் இருப்புக்கு 90% பங்களிக்கின்றது.[7] இங்கு சுரங்கத்தொழில் தவிர மின் உற்பத்தி, கரிமவேதிப்பொருட்கள், எண்ணெய் அகழ்வுப்பொறிகள், மற்றும் கட்டிடப் பொருட்கள் பொன்ற தொழில்கள் குறிப்பிடும்படியாக உள்ளன. சில மூலங்களின் படி, இந்த மாகாணம் சீனாவின் அணுசக்தி தொழிற்துறையின் மையமாக இருக்கிறது. கான்சுவின் பொருளாதாரம் அண்மைக்காலங்களில் வளர்ந்துவந்த போதிலும், கான்சு இன்னமும் சீனாவின் வறிய மாகாணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மக்கள் வகைப்பாடுகான்சு மாகாணத்தின் மக்கள் தொகை 30,711,287 ஆகு்ம். மக்கள் தொகையில், 73% கிராமப்புறத்தில் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 92% ஹான் ஆவர். மேலும் ஊய், திபத்திய மக்கள், தொங்சியாங் முஸ்லீம்கள், தூ, மன்சு, உய்குர், யுகுர், பொனன், மங்கோலியர், சலார், கசாக் ஆகிய சிறுபான்மையினர் உள்ளனர். மொழிகள்கான்சுவாசிகள் பெரும்பாலோர் வடக்கு வட்டார மாண்டரின் சீனமொழியைப் பேசுகின்றனர். கான்சு எல்லைப்பகுதிகளில் தூ, அம்தோ, திபெத்திய மொழி, மங்கோலியன், கசாக் மொழி ஆகிய மொழிகள் சிறுபான்மை மக்களால் பேசப்படுகின்றன, என்றாலும் சிறுபான்மையினரில் பெரும்பாலானோர் சீன மொழி பேசத்தெரிந்தவர்கள். பண்பாடுகான்சு சமையலில் அங்கு விளையும் பயிர்களான கோதுமை, பார்லி, தினை, பீன்ஸ், சக்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் முதன்மையானவை. மேலும் சீனாவிற்குள் கான்சு அதன் தனித்துவமான இழு நூடுல்ஸ் எனும் உணவு வகைக்காகவும் உண்மையான கான்சு சமையலைச் சிறப்பிக்கும் வகையிலுள்ள முஸ்லீம் உணவகங்களுக்காகவும் அறியப்படுகிறது. சமயம்ஒரு 2012 கணக்கெடுப்புப்படி[8] கான்சுவின் மொத்த மக்கள்தொகையில் 12% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர், இதில் பெரிய குழுவாக இருப்பது புத்தமதம் 8.2% ஆகும். முஸ்லிம்கள் 3.4%, சீர்திருத்த கிருத்தவர் 0.4%, கத்தோலிக்கர் மொத்தம் 0.1% (கிருத்துவர் 2004 இல் 1.02% இருந்த நிலையில் 2012 ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் தொகையில் 0.5% ஆக குறைந்து உள்ளனர்.[9]) 88% சமயப் பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாடு கொண்டவர்களாகவோ, கன்பூசியம், தாவோ, நாட்டுப்புறச்சமயத்தினராகவோ உள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia