நினைக்க தெரிந்த மனமே (திரைப்படம்)
நினைக்க தெரிந்த மனமே (Ninaikka Therintha Maname) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். கே. தினகர் எழுதிய இப்படத்தை சுரேஷ் இயக்கியிருந்தார். மணியன் எழுதிய வாழ்த்தும் நெஞ்சங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்ட,[1] இத்திரைப்படத்தில் மோகன், சந்திரசேகர், ரூபினி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 ஆகத்து 14 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, 13 வயதில், "கண்ணுக்கும் கண்ணுக்கும்" பாடலுக்கு இசைப்பலகை வாசித்தார்.[4]
வெளியீடும் வரவேற்பும்நினைக்க தெரிந்த மனமே 1987 ஆகத்து 14 அன்று வெளியானது.[5] இந்தியன் எக்ஸ்பிரஸ் "இந்நாவல் திரைப்படத்தைச் சுருங்கச் சொன்னால் பாடல்களாலும் சண்டைகளாலும் நிறைந்துள்ளது. படம் சிறிதாகவும், அழகானதாகவும் இருந்திருந்தால் அது உதவியிருக்கலாம்". என்று எழுதியது.[6] கல்கியின் ஜெயமன்மதன், "இளையராஜாவின் இசையை மட்டுமே படத்தைக் காப்பாற்றும் கருணையாகக் கண்டேன்" என்று எழுதினார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia