காயத்ரி ஆறு

காயத்ரி
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் மகாராட்டிரம் மாவட்டம் சதாரா
முதன்மை ஆறு கிருஷ்ணா ஆறு

காயத்ரி ஆறு (Gayatri River) இந்தியாவில், மகாராட்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பழைய மகாபலீஸ்வருக்கு அருகில் உள்ள பஞ்சகங்கை ஆலயத்தின் பகுதியிலிருந்து தொடங்குகிறது.[1]

இந்த ஆறு தென்னிந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆறுகளுள் ஒன்றான கிருஷ்ணா ஆற்றுடன் காரத் என்ற இடத்தில் சந்திக்கிறது. இந்த ஆறானது மிகச்சிறியதும், மெதுவாக ஓடக்கூடியதும் ஆகும்.

புவியியலும் வரலாறும்

மஹாபலீஸ்வர் என்பது கிருஷ்ணா ஆறு, கொய்னா ஆறு, சாவித்திரி ஆறு, வீணா ஆறு மற்றும் காயத்ரி ஆறு ஆகிய ஐந்து ஆறுகளின் பிறப்பிடம் ஆகும். பழைய மகாபலீஸ்வர் என்ற இடத்தில் உள்ள பஞ்சகங்கை என்ற கோயிலே இந்த ஆறுகளின் மூலமாக உள்ளது. புகழ் பெற்ற பழைய மகாபலீஸ்வரில் உள்ள புராதன சிவாலயத்தில் உள்ள பசு ஒன்றின் சிலையின் முகட்டில் இருந்து ஆறுகளின் தொடக்க இடம் அமைந்திருந்தது. இந்த உற்பத்தி மூலமானது, சாவித்திரியால் மும்மூர்த்திகள் சாபம் பெற்றதன் விளைவாக விஷ்ணு எடுத்த தோற்றமே அந்த முகடாகும் என புராணங்கள் சொல்கின்றன. வெண்ணாறு மற்றும் கொய்னா ஆறு ஆகியவை சிவன் மற்றும் பிரம்மா ஆகியோரின் வடிவங்கள் எனவும் புராணங்கள் கூறுகின்றன. காயத்ரி உள்ளிட்ட 4 ஆறுகளும் அந்த பசு சிலையின் வாயிலிருந்தே உற்பத்தியாகின்றன. இவை அனைத்தும் கிருஷ்ணா ஆற்றுடன் கலப்பதற்கு முன்பாக சற்றுத் தொலைவு பயணிக்கின்றன. இந்த மாபெரும் கிருஷ்ணா ஆறானது, மகாராட்டிரம், கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது.[2]

இதனையும் காண்க

  1. கிருஷ்ணா ஆறு
  2. கொய்னா ஆறு
  3. சாவித்திரி ஆறு
  4. வெண்ணா ஆறு

மேற்கோள்கள்

  1. india-reports.com (indiastudychannel.com). http://www.indiastudychannel.com/resources/49070-MAHABALESHWAR.aspx. Missing or empty |title= (help)india-reports.com (indiastudychannel.com). http://www.indiastudychannel.com/resources/49070-MAHABALESHWAR.aspx. 
  2. "404". Archived from the original on 2007-12-14. Retrieved 2018-09-10. {{cite web}}: Cite uses generic title (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya