கிருஷ்ணா ஆறு
![]() கிருட்டிணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராட்டிரா, கருநாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள மகாபலீசுவர் என்ற இடத்தில் உற்பத்தி ஆகும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஏமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்த பெரிய நகரம் விசயவாடா ஆகும். ஆற்றின் மூலம்கிருட்டிணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராட்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், மகாபலீசுவர் எனுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது. துணை ஆறுகள்துங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முசி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும். ![]() அணைகள்சிரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள சிரீசைலம் அணை, நாகார்சுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்சுன சாகர் அணை. நாகார்சுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கருநாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது. இதனையும் காண்க
மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia