சாவித்திரி ஆறு
சாவித்திரி ஆறு, இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்தில், சதாரா மாவட்டத்தில் உள்ள மஹாபலீஸ்வர் மலையில் உற்பத்தியாகும் 5 ஆறுகளில் ஒன்று. இந்த ஆறு டாக்டர். மகத் குலாலே என்பவரால் 1982ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மஹாபலிஷ்வரிலிருந்து உற்பத்தியாகி ராய்கட் மாவட்டத்தில் பாய்ந்து, கொங்கணப் பகுதியில் உள்ள ஹரிஹரிஷ்வரில் அரபிக் கடலில் கலக்கிறது.[1][2] இது போலாட்புர், மகத், மன்கோன் மற்றும் சிரிவரதன் ஆகிய தாலுக்கா வழியாக செல்கின்றது. சாவித்திரி ஆற்றின் கரையில் சிவன் கோயில்கள் உள்ளன. கடைசி 100கிமீல் ரைகாட் மற்றும் இரத்தினகிரிக்கிடையே எல்லையாக அமைகிறது. இதன் முக்கியமான கிளையாறு டாஸ்கானில் வலப்புறத்தில் நுழையும் கல் நதியாகும். 3 ஆகத்து 2016 ஆம் ஆண்டு ரைகாட் மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 24 பேர் காணமல் போயினார்கள். இரண்டு மாநில போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளன. இதனையும் காண்க
![]() ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia