காரி நாயனார்

காரி நாயனார்
பெயர்:காரி நாயனார்
குலம்:அந்தணர்
பூசை நாள்:மாசி பூராடம்
அவதாரத் தலம்:திருக்கடவூர்
முக்தித் தலம்:திருக்கடவூர்

“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

காரி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார்[1][2]. அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.

அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவ பெருமானுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாரும் மனம் மகிழும் இன்ப மொழிப் பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

  1. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. 63 நாயன்மார்கள், ed. (22 ஜனவரி 2011). காரி நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link) CS1 maint: year (link)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya