தில்லை வாழ் அந்தணர்தில்லைச் சிற்றம்பலவாணர்க்குப் பூசனை புரிதற்குரிய புண்ணியர்கள் தில்லைவாழந்தணர்கள். திருவடிமறவாச் சீருடையாளராகிய இவர்கள் பெருகிய அன்போடு பூசனைத்திரவியங்கள் ஏந்திச் சென்று, மங்கலகரமான பூசைக் கருமங்களையெல்லாம் முறைப்படி புரிவர். வேத மந்திரங்களால் பெருமானைப் போற்றித் துதிப்பர். மூவாயிரவர் என்னும் தொகையினரான இவர்கள் தில்லைப் பதியிலே வாழ்ந்து தத்தமக்குரிய அகம்படி தொழும்பினைக் குறைவறச் செய்வர்.[1] இச்செம்மை வேதியர் மறுவற்ற குடும்பத்திற் பிறந்தவர்கள்; மாசிலா ஒழுக்கத்தினையுடையவர்கள்; செம்மனப் புனிதர்கள். தணிந்த சிந்தையர். தமக்கு அணிகலன் திருநீறும் உருத்திராக்கமுமாகிய சிவசாதனங்கள் எனக் கொள்பவர். தாம் பெறுவதற்குரிய பேறொன்றுமில்லை என்றெண்ணும் பெருமையினர். இதனால் தமக்குத் தாமே ஒப்பாகும் தலைமையினர். நான்கு வேதமும் ஆறங்கமும் கற்றவர்; முத்தீ வளர்த்து வேள்வி செய்பவர்; ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் ஆட்சியால் கலியின் தீமையை பொருளாக்கொண்டு தத்துவ நெறியில் நிற்பவர். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறியையும் நன்கு தெரிந்து மேம்பட்டவர்கள். தானமும் தவமும் வல்லவர்கள், ஊனம் சிறிதுமில்லாதவர்கள். உலகெல்லாம் புகழும் வண்ணம் மானமும் பொறையும் [2] தாங்கி மனையறம் புரிவர். 'இவ் இருடிகளுள் நாம் ஒருவர்' என்று இறைவனால் அருளிச் செய்யப் பெற்ற பெருமையை உடையவர்கள் இவர்கள். இவர் தம் பெருமையை எம்மால் எடுத்துரைக்க இயலாது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு "தில்லைவாழந்தணதம் அடியார்க்கும் அடியேன்" என்று சிவபெருமானே முதலாவதாகக் கூறிய திருக்கூட்டத்தினர் அன்றோ இவர்கள்! பெருமைக்கு எல்லையாய தில்லை வாழந்தணர்கள் என்றும் தில்லைச் சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி வாழ்வர். நுண்பொருள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia