காவேரி (தமிழ் நடிகை)
காவேரி என்பவர் ஒரு தென்னிந்திய முன்னாள் நடிகை ஆவார். இவர் முக்கியமாக திரைப்படங்களில் நடித்து, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றினார்.[1] அறிமுகம்1990 ஆம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் வழியாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமான காவேரி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் வம்சம் தொடரில் நடித்தார். இவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புற்றுநோயால் இறந்தார். இதன் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இவரது உடல் எடையை குறைத்தது. 2013 ஆம் ஆண்டில், காவேரி விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தொழிலதிபர் ராகேஷை மணந்தார்.[2] இவரது கணவர் சென்னையின் வேளச்சேரியில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்திவருகிறார். திரைப்பட வாழ்க்கை1990 இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் திரைப்படத்தில் காவேரி அறிமுகமானார் [3] மெட்டி ஒலி மற்றும் தனம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர் திரைப்படவியல்
தொலைக்காட்சி தொடர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia