கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ்
![]() ![]() கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Kingfisher Airlines Limited) இந்தியாவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனமாகும். இதன் தலைமையகம் மும்பையின் அந்தேரியில் உள்ளது, இதன் பதிவு அலுவலகம் பெங்களூரின் யுபி சிட்டியில் உள்ளது. கிங்க்ஃபிஷர் நிறுவனம் தனது பங்கீட்டாளரான யுனைடெட் ப்ரேவெரிஸ் குழுவுடன், குறைந்த கட்டண விமானச் சேவையான கிங்க்ஃபிஷர் ரெட்டின் 50 சதவீத பங்குகளைப் பகிர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்நாட்டு விமானச் சந்தையில் இரண்டாவது அதிகப்படியான பங்குகளைக் கொண்ட நிறுவனம் கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமாகும். பலவைகையான பொருளாதாரப் பிரச்சினைகளை கிங்க்ஃபிஷர் நிறுவனம் சந்தித்தது.[3] 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பல நிதிப்பிரச்சினைகளால், அந்தாண்டின் ஏப்ரல் மாதம் இதன் பங்குகள் சந்தைப் பகுதியில் குறையத் தொடங்கின.[4][5] பறக்கும் விமானங்களுக்கான அனுமதியினை வழங்கும் டிஜிசிஏ அக்டோபர் 20, 2012 இல் கிங்க்ஃபிஷர் நிறுவனத்தின் விமானச் சான்றிதழை இடைநீக்கம் செய்தது. இதனால் கிங்க்ஃபிஷர் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, பணியாளர்கள் பல நாட்கள் வேலையில்லாமல் இருந்தனர். அக்டோபர் 25, 2012 இல் கிங்க்ஃபிஷரின் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். [6] இலக்குகள்ஏப்ரல் 10, 2012 ன் படி கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவில், 25 உள்நாட்டு சேருமிடங்களைக் கொண்டிருந்தது. இறுதியாக டெல்லி- லண்டனின் ஹீத்ரூ இடையிலான கடைசிப் பறப்பிற்குப் பின் ஏப்ரல் 10, 2012 முதல் தனது பன்னாட்டுச் சேவைகள் அனைத்தையும் இடைநிறுத்தம் செய்தது. [7] விமானச்சேவை செயல்படத் தொடங்கியபோது ஏர்பஸ் ஏ320 விமானங்கள், ஏடிஆர் 42 ஏடிஆர் 72 விமான ரகங்களுடன் செயல்பட்டது. லண்டன், இங்கிலாந்து ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 2008 இல் இயக்கப்பட்ட லண்டன், இங்கிலாந்து பறப்புகள்தான் கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸின் முதல் நீண்ட தூர விமானச் சேவை ஆகும். புதிய விமானங்களைக்கொண்டு ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியனியா ஆகிய இடங்களுக்கும் நீண்ட தூர சேவை வழங்க முடிவுக்கு வந்தது கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ். நீண்ட தூர நிறுத்தற் சேவைகள் அனைத்தும் ஏர்பஸ் ஏ330 – 200 ரக விமானங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டன. கோட்ஷேர் ஒப்பந்தங்கள்சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் கிங்க்ஃபிஷர் நிறுவனத்தினை இடைநீக்கம் செய்வதற்கு முன்பு, கிங்க்ஃபிஷர் நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தன.
விமானக் குழுக்கள்ஏர்பஸ் ஏ320 குடும்ப ரக விமானங்கள் மற்றும் ஏடிஆர் 42, ஏடிஆர் 72 ஆகிய விமானங்கள்தான் கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸில் முக்கிய இடத்தில் இருந்தன. இவை குறைந்த தூர நிறுத்தற்குரிய விமானங்களாகவும், உள்நாட்டு பயன்பாட்டிற்கான விமானங்களாகவும் பயன்பட்டன. ஏர்பஸ் ஏ330 – 200 விமானங்கள் சர்வதேச அளவில் நெடுந்தூர நிறுத்தற்குரிய விமானங்களாக செயல்பட்டன. ஜனவரி 2009 ன் படி, கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸின் விமானக் குழுக்களின் சராசரி வயது 2.3 ஆண்டுகளாகும். அனைத்து ஏடிஆர் ரக விமானங்களும், சில ஏர்பஸ் ஏ320 விமானங்களும் கிங்க்ஃபிஷர் ரெட் விமானச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2012 வரை கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பின்வரும் விமானக் குழுக்களைக் கொண்டிருந்தது.
கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தற்போது எந்த உயர்தர வழித்தடங்களுடனும் செயல்படவில்லை. [10] விருதுகள்
கிங்க்ஃபிஷரின் வசதிகள் மற்றும் அறைகள்கிங்க்ஃபிஷரின் முதல் ரக பயணிகள், கிங்க்ஃபிஷரின் வெள்ளிக் குழு மற்றும் கிங்க்ஃபிஷரின் தங்கக் குழு ஆகியக் குழுக்களின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக கிங்க்ஃபிஷர் சில விமான நிலையங்களில் தனிப்பட்ட அறைகள் மற்றும் சில வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. அந்த விமான நிலையங்களின் விவரம் பின்வருமாறு:
நஷ்டம்2005 ஆம் ஆண்டு மே மாதம் செயல்படத்துவங்கிய இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் அக்டோபர் மாதம் இதுவரை 16,026 கோடிகள் நஷ்டம் அடைந்துள்ளது. [11] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia