கிங் காங் (நடிகர்)
கிங் காங் ( பிறப்பு சங்கர் ) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கிங் காங்கின் நடனம் இடம்பெற்ற அதிசயப் பிறவி (1990) படத்தின் துண்டுக் காட்சி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இணையத்தில் வைரல் ஆனது.[3][4] தொழில்கிங் காங் தமிழ் படங்களில் முதன்மையாக நகைச்சுவை துணை வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றிய இவர் நடனக் கலைஞராக மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[5] ரஜினிகாந்திற்கு முன்னால் கிங் காங் நடனமாடிய அதிசயப் பிறவி (1990) திரைப்படத்தின் துண்டுக் காட்சி 2000-களின் பிற்பகுதியில் " லிட்டில் சூப்பர்ஸ்டார் " என்ற பெயரில் பிரபலமான இணைய வைரல் காணொளியாக மாறியது. 2007-ஆம் ஆண்டில், இவர் வறுமையில் வாடுவதாக செய்திகள் வந்தன.[6] இதன் பிறகு இவர் மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று படங்களில் தோன்றத் தொடங்கினார். குறிப்பாக போக்கிரியில் ஒரு நடனக் காட்சியில் தோன்றினார். பின்னர் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் கருப்பசாமி குத்தகைதாரர் (2007) மற்றும் கந்தசாமி (2009) ஆகியவற்றில் தோன்றினார். நடிகை சகீலாவுக்கு ஜோடியாக ஒன்னற குள்ளன் என்ற பெயரிலான குறைந்த செலவில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் எடுக்கபட்ட திரைப்படத்தில் இவர் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் படம் வெளியிடப்படாமல் உள்ளது.[7] தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia