மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்![]()
![]()
இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2017 ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.[1] 2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2] இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:
(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை). 1990 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2012 மற்றும் 2017 ஆண்டுகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டு வந்துள்ளது. நாடுகளின் முழுமையான பட்டியல்ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[1] 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் அறிக்கை வெளியிடப்பட்டது. குறிப்பு:
மிக உயர்நிலை மனித மேம்பாடு
உயர்நிலை மனித மேம்பாடு
நடுமட்ட மனித மேம்பாடு
தாழ்நிலை மனித மேம்பாடு
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[1] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா. மேற்கோள்கள்
வெளியிணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia