கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள்
கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகள் (Eastern Highlands moist deciduous forests), அல்லது கிழக்கு டெக்கான் ஈரமான இலையுதிர் காடுகள், என்பது கிழக்கு-மத்திய இந்தியாவில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல ஈரமான அகல இலைக் காடுகள் உள்ள சுற்றுச்சூழலாகும். இந்த வாழிடம் 341,100 சதுர கிலோமீட்டர்கள் (131,700 sq mi), பரப்பில் ஆந்திரா, சத்தீசுகர், சார்க்கண்டு, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, ஒடிசா மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பரவியுள்ளது. அமைத்தல்கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசாவின் வங்காள விரிகுடாவிலிருந்து , கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் வடக்கு பகுதி மற்றும் வடகிழக்கு தக்காணப் பீடபூமி வழியாகக் கிழக்கு சாத்பூரா மலைத்தொடர் மற்றும் மேல் நருமதை பள்ளத்தாக்கு வரை பரவியுள்ளன. தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள வங்காள விரிகுடாவிலிருந்து பருவப் பெயர்ச்சி காற்று காரணமாகச் சுற்றுச்சூழலின் காடுகள் நீடிக்கின்றன. மத்திய தக்காணப் பீடபூமி தென்மேற்கு மற்றும் மேற்கில் வறண்ட இலையுதிர் காடுகள், வடமேற்கில் நர்மதா பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் வடக்கே சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ளிட்ட வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளினால் சூழப்பட்டுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு மேற்கே அமைந்துள்ள வறண்ட வடக்கு வறண்ட இலையுதிர் காடுகள், கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. மலைத்தொடரின் மழை மறைவு பிரதேசம், வங்காள விரிகுடாவில் ஈரப்பதம் நிறைந்த பருவமழை காற்றை ஓரளவு தடுக்கிறது. ஈரப்பதமான ஒரிசா அரை-பசுமையான காட்டுச் சுற்றுச்சூழல் ஒரிசாவின் கடலோர தாழ் நிலங்களில் வடகிழக்கில் அமைந்துள்ளது. தாவரங்கள்இந்த சூழ்நிலைப் பிரதேச காடுகளில் அதிக அளவில் குங்கிலியம், (சோரியா ரோபசுடா) காணப்படுகிறது. இதனுடன் தெர்மினலியா, ரூபனியரின், டேனா, சைஜியம், பூச்சானியா, கிளிசிடானந்தசு மற்றும் அனோஜெச்சசு மண் வகைகளுக்கு தக்கவாறு காணப்படுகிறது. இங்குக் காணப்படும் பல தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு இமயமலையின் ஈரமான காடுகள் காணப்படுபவையாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும்பலா போன்ற தாவரங்களும், ஷெஃப்லெரா கொடியின் ( ஸ்கெஃப்லெரா வெனுலோசா ), கூட்டு ஃபிர் ( க்னெட்டம் உலா ) மற்றும் வஞ்சி மரம் போன்ற பல லியானாக்களும் அடங்கும். கிழக்கு இமயமலையில் காணப்படும் தனித்துவமுடைய இந்திய மிளகு மரம் மற்றும் பல புதர்கள், மூலிகைகள் மற்றும் மஞ்சள் இமயமலை ராஸ்பெர்ரி, தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி ( போஹ்மேரியா மேக்ரோபில்லா ) மற்றும் விப் கார்ட் கோப்ரா லில்லி ஆகியவை அடங்கும். உலகளவில் அச்சுறுத்தப்பட்ட பல தாவரச் சிற்றினங்கள் இந்த வாழிடச் சுற்றுச்சூழலில் காணப்படுகின்றன, இதில் இரண்டு உள்ளூர் தாவரங்களான லூகாசு முகர்ஜியானா மற்றும் பிளெபோபில்லம் ஜெய்போரென்சிசு ஆகியவை அடங்கும் .
விலங்குகள்![]() இந்த சுற்றுச்சூழலில் வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகளின் பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் காணப்படும் பெரும் பாலூட்டிகளாக வங்காளப் புலி, ஓநாய், செந்நாய், மற்றும் தேன் கரடி, இந்தியக் காட்டெருது, நாற்கொம்பு மான், புல்வாய், இந்தியச் சிறுமான் ஆகியன. ஒரு காலத்தில் வாழ்ந்த ஆசிய யானைகள் நீண்ட காலத்திற்கு முன்பே அழிந்துவிட்டன. இந்தச் சுற்றுச்சூழலில் காணப்படும் ஒரே அகணிய உயிரி குகைகளில் வசிக்கும் கஜூரியாவின் இலை மூக்கு வெளவால் ஆகும் .
பாதுகாப்பு![]() ![]() இதன் அசல் வாழ்விடங்களில் ஏறக்குறைய 25% உள்ளது. இதில் பெரும்பகுதி 5000 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது அல்லது பெரிய பரப்பிலானது. இங்கு 31 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 13,540 சதுர கிலோ மீட்டர் பரப்பில், இச்சுற்றுச்சூழலின் 4% பரப்பில் இவ்வாழ்விடத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது. இச்சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் உள்ளது.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia