எல்லோரா , மதுரை மீனாட்சி கோயில் கோபுரத்துடன் கீதா பிரஸ் அலுவலக நுழைவாயில்
கோரக்பூர் தொடருந்து நிலையத்தில் கீதா பிரசின் கடை
கீதா பிரஸ் (Gita Press ) என்பது இந்து சமய சாத்திரங்கள், காவியங்கள், தர்ம சாத்திரங்கள் அனைத்தும் முக்கிய உலக மொழிகளில் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும்.[ 1] இந்து சமயத்தின் தத்துவங்கள், தர்ம சாத்திரங்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்க, கீதா பிரஸ் பதிப்பக நிறுவனம் 29 ஏப்ரல் 1923 அன்று நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்கள் ஜெய தயாள் கோயங்கா, கன்ஷியாம் தாஸ் ஜலான் மற்றும் ஸ்ரீ அனுமன் பிரசாத் போதர் ஆவர். கீதா பிரசின் தலைமையகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரத்தில் செயல்படுகிறது. கீதா பிரஸ் இந்து சமயம் மற்றும் நீதி நூல்களை வெளியிடுவதுடன், மாத இதழ்களையும் பல மொழிகளில் வெளியிடுகிறது.[ 2] இதுவரை கீதா பிரஸ் 3,500 சமய சாத்திரங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளதுடன், பகவத் கீதை தொடர்பாக சிறிதும், பெரிதுமாக 100 விளக்க நூல்களை வெளியிட்டுள்ளது.[ 3]
இந்திய அரசு 2021-ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு கீதா பிரஸ் நிறுவனத்திற்கு சூன் 2023ல் அறிவித்தது.
வெளியீடுகள்
மாத இதழ்கள்
கீதா பிரஸ் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மாதந்தோறும் வெளியிடும் இதழ்களுக்கு கட்டணம் செலுத்தி படிக்கும் இதழ்களாகும்.[ 4]
கல்யாண் (இந்தி மொழியில் ), மாத இதழ், 1927 முதல், இந்து சமயக் கருத்துகள், இந்து சமய சாதுக்கள் மற்றும் நீதிக் கதைகள் குறித்து வெளியாகிறது.
கல்யாண் கல்பதரு (ஆங்கிலத்தில் ), மாத இதழ், 1934-ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியில் வெளியாகும் கல்யாண் இதழ் போன்று வெளியாகிறது.
இந்து சமய நூல்கள்
ஆங்கிலம் , சமசுகிருதம் , இந்தி , மராத்தி , தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஒரியா , குஜராத்தி , வங்காளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் கீதா பிரஸ் இந்து சமய நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிடுகிறது.
பிற வெளியீடுகள்
பக்தர்களின் கதைகள் மற்றும் பக்தி கீதங்கள்
குழந்தைகளுக்கான சிறு நூல்கள்
கீதா பிரசின் கிளைகள்
கீதா பிரஸ் நூல் வெளியிட்டு நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கிளைகள் உள்ள்து. குறிப்பிட்ட சில தொடருந்து நிலையங்களில் நூல் விற்பனைக் கடைகள் உள்ளது.
பெங்களூரு
கர்நாடகா
7/3, இரண்டாம் குறுக்கு, லால்பாக் சாலை, பெங்களூரு – 560027
பெங்களூர், யஷ்வந்த்பூர், SSPN, ஹூப்ளி
கட்டக்
ஒடிசா
பாரதிய டவர்ஸ், பதாம் படி, கட்டக் – 753009
கட்டக், புவனேஸ்வர்
தில்லி
தில்லி
2609, புது சரக், தில்லி – 110006
தில்லி, நிஜாமுத்தீன்
அரித்துவார்
உத்தராகண்ட்
சப்ஜிமண்டி, மோதி பஜார், அரித்துவார் – 249401
அரித்துவார்.
ஐதராபாத்
தெலுங்கானா
41, 4-4-1, தில்சத் பிளாஷா, சுல்தான் பஜார், ஐதராபாத் – 500095
செக்கந்திராபாத் -விஜயவாடா
இந்தூர்
மத்தியப் பிரதேசம்
G-5, சிறீ வர்தன், 4 R.N.T. மார்க், இந்தூர் – 452001
இந்தூர்
ஜள்காவ்
மகாராட்டிரா
7, பீம் சிங் மார்கெட், தொடருந்து நிலையம் அருகில், ஜள்காவ் – 425001
அவரங்காபாத்
கான்பூர்
உத்தரப் பிரதேசம்
24/55, பிர்கானா சாலை, கான்பூர் – 208001
கான்பூர், லக்னோ, கோட்டா
கொல்கத்தா
மேற்கு வங்காளம்
151, மகாத்மா காந்தி சாலை, கொல்கத்தா – 700007
கொல்கத்தா, ஹவுரா, சியால்டா, தன்பாத், கரக்பூர்
நாக்பூர்
மகாராட்டிரா ]
சிறீஜி கிருபா வளாகம், 851, புது எட்டாவரி சாலை, நாக்பூர் – 440002
கோண்டியா
பாட்னா
பிகார்
அசோகர் இராஜபத், மகளிர் மருத்துவமனை எதிரில், பாட்னா – 800004
பாட்னா
ராய்ப்பூர்
சத்தீஷ்கர்
மிட்டாய் வளாகம்,கஞ்ச்பாரா, தேல்கானி சதுக்கம், ராய்ப்பூர் – 492009
இராய்ப்பூர்
ராஞ்சி
ஜார்கண்ட்
கார்ட் சராய் சாலை, மேல் பஜார், பிர்லா கட்டி, ராஞ்சி – 834001
ராஞ்சி
சூரத்
குஜராத்
வைபவ் அபார்ட்மெண்ட், நூதன் நிவாஸ் எதிரில், பதர் சாலை, சூரத் – 395001
அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பரூச், நாடியாத்
வாரணாசி
உத்தரப் பிரதேசம்
59/9, நிச்சிபாக்Nichibag, வாரணாசி – 221001
முகல்சராய்
கோரக்பூர்
உத்தரப் பிரதேசம்
கீதா பிரஸ் அஞ்சலகம, கோரக்பூர் – 273005
சாப்ரா, சிவான், முசாபர்பூர், கோரக்பூர், கோண்டியா, ஜபல்பூர், சமஸ்திபூர்
தொடர்புடைய நிறுவனங்கள்
கீதா பிரஸ் நூல் விற்பனை கடை, முனி கி ரெதி, ரிஷிகேஷ்
கீதா பவன் , முனி கி ரெட்டி, ரிஷிகேஷ்
ரிஷ்கேஷ்-பிரம்மச்சாரிய ஆஸ்ரமம் , (வேத பாடசாலை), சூரூ , இராஜஸ்தான்
ஆயுர்வேதி சன்ஸ்தான் (ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி நிலையம், ரிஷ்கேஷ்)
கீதா பிரஸ் தேவா தளம் (இயற்கை பேரிடர் நிவாரண அமைப்பு)
ஹஸ்தா நிர்மிதி வஸ்திர விபாக் (கைத்தறி துணிகள் உற்பத்தி நிலையம்)
பாரதிய கிராமிய துணிக்கடை (சில்லறை விற்பனை கடை, மும்பை)
விருதுகள்
இந்திய அரசு 18 சூன் 2023 அன்று கீதா பிரஸ் நிறுவனத்திற்கு 2021ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு அறிவித்துள்ளது.[ 6] [ 7]
மேற்கோள்கள்