கீழ் கோகிஸ்தான் மாவட்டம்
கீழ் கோகிஸ்தான் மாவட்டம் (Lower Kohistan District) (பஷ்தூ: لر / کوز کوہستان ولسوالۍ , Urdu: ضلع لوئر کوہستان), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5][6] இதன் தலைமையிடம் பட்டான் நகரம் ஆகும். 2014-ஆம் ஆண்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தை மேல் கோகிஸ்தான் மாவட்டம் மற்றும் கீழ் கோகிஸ்தான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் பாலாஸ் தாலுகா மற்றும் பட்டான் தாலுகா எனும் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது.[7]2017-ல் பாலாஸ் தாலுகாவை கொலை-பாலாஸ் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. [8] மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ் கோகிஸ்தான் மாவட்ட மக்கள் தொகை 2,02,502 ஆகும். அதில் ஆண்கள் 1,08,765 மற்றும் பெண்கள் 93,737 ஆக உள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இசுலாமியர் அல்லாதவர்கள் 8 பேர் மட்டுமே.[9]மக்கள் தொகையில் 83.77% மக்கள் கோகிஸ்தானி மொழி பேசும் தார்திக் இன மக்கள் ஆவார். 15.63% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.[9] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. அவைகள்:
மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள்இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்து அனுப்புகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia