நடிகர், நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர், வலையொலி
செயற்பாட்டுக் காலம்
2008–present
வாழ்க்கைத் துணை
எமிலி வி. கார்டன் (தி. 2007)
உறவினர்கள்
ஷெரீன் நஞ்சியானி (உறவினர்)
குமைல் அலி நஞ்சியானி (ஆங்கிலம்: Kumail Ali Nanjiani) (பிறப்பு: மே 2, 1978)[1] என்பவர் பாக்கித்தானிய நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிலிக்கான் வேலே' (2014–2019) என்ற நகைச்சுவைத் தொடரில் தினேஷ் என்ற பாத்திரத்திற்காகவும், 'தி பிக் சிக்' (2017)[2] என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் இணைந்து எழுதி நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். இந்த திரைப்படத்தில் இவரது மனைவி எமிலி வி.கோர்டனுடன்[3] இணைந்து எழுதியதற்காக, சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4][5] இவரை 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.[6]
இவர் கராச்சியில் உள்ள செயின்ட் மைக்கேல் கான்வென்ட் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் தனது 18 வயதில் அமெரிக்காவிற்குச் சென்று, அயோவாவில் உள்ள கிரின்னல் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் 2001 இல் கணினி அறிவியல் மற்றும் தத்துவத்தில் இரட்டைப் பட்டம் பெற்றார்.