குருங்காடை
குருங்காடை [Common buttonquail or Small buttonquail (Turnix sylvaticus)] என்பது டர்னிசிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு கருங்காடை வகைப் பறவை ஆகும். இவை காடைகளைப் போல் தோற்றமளித்தாலும் காடை குடும்பத்தை விடவும் கரைப்பறவைகளுக்கே நெருக்கமானவை. பரவல்ஐரோப்பாவில் தெற்கு ஸ்பெயின் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் மொரோக்கோ, ஆப்பிரிக்காவின் வடமேற்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகளின் தென் பகுதி, இந்தியத் துணைக்கண்டத்தின் மத்தியப் பகுதி, வடமேற்குப் பகுதி, மத்திய வடக்கு மற்றும் மத்திய தென் பகுதிகள், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, மலேசிய மற்றும் இந்தோனேசியத் தீவுகள். தமிழ்நாட்டில் குருங்காடை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது[2]. உடலமைப்பும் கள அடையாளங்களும்13 முதல் 16 cm வரை நீளம் இருக்கும்; வெளிர் மஞ்சள் நிறக் கண், மங்கலான புருவம் இத்துடன் செம்பழுப்பு நிற உடலும் கூர்மையான வாலும் கொண்டது. ஆண் பறவை பெண்ணை விடச் சிறியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia