குருதாஸ் காமத்
குருதாஸ் காமத் (Gurudas Kamat) (5 அக்டோபர் 1954 - 22 ஆகஸ்ட் 2018) இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார். கல்விதொழிலில் வழக்கறிஞரான காமத், மும்பை ராம்நிரஞ்சன் போடார் கல்லூரியிலும்,[1] மும்பை அரசு சட்டக் கல்லூரியிலும் சட்டப் பட்டம் பெற்றார்.[2] தொழில்இவர் 2009 இல் மகாராட்டிராவின் வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதியிலும், 1984, 1991, 1998 , 2004 இல் மகாராஷ்டிராவின் வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] இவர் 2009 முதல் 2011 வரை இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கூடுதல் பொறுப்பில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.[4] ஜூலை 2011இல், இவர் அமைச்சர் பதவியை விட்டு வெளியேறினார்.[5][6][7][8][9] 2013 இல், ஜூலையில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான், குசராத்து, தாத்ரா மற்றும் நகர் அவேலி, தமனும் தியூவும்[10] ஆகிய பகுதிகளின் கட்சிக்குப் பொறுப்பேற்றார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசின் முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரசு செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.[11] 2014இல், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோற்றார்.[12][13] 2017ஆம் ஆண்டில், காமத் இந்திய தேசிய காங்கிரசில் வகித்த அனைத்து பதவிகளையும் விட்டு வெளியேறினார்.[4][14] இவர் பதவி விலகிய போதிலும், கட்சி இவரை பொதுச் செயலாளராகவே அங்கீகரித்து வந்தது. குடும்பம்1981 ஆம் ஆண்டில், காமத் மகரூக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவரான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார்.[14] இறப்புகுருதாஸ் காமத் 22 ஆகஸ்ட் 2018 அன்று மாரடைப்பால் புதுதில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[15][16] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia