குல்தாபாத்
![]() ![]() குல்தாபாத் (Khuldabad), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்த குல்தாபாத் தாலுகாவின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இங்கு முகலாயப் பேரரசன் ஔரங்கசீப் கல்லறை[1] மற்றும் படைத்தலைவர் மாலிக் ஆம்பரின் கல்லறைகள் உள்ளது. இந்நகரம் மாவட்டத் தலைமையிடமான சம்பாஜி நகருக்கு வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புவியியல் & சுற்றுலாகுல்தாபாத் கடல் மட்டத்திலிருந்து 500 அடி (152.4 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எல்லோரா குடைவரைகள் குல்தாபாத்திற்கு 4 மைல் தொலைவிலும், அஜந்தா குகைகள் 87 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. குல்தாபாத்தில் பயணியர்கள் விடுதிகள் உள்ளது..[2] மக்கள் தொகை வகைப்பாடு2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும் , 2,861 குடியிருப்புகளும் கொண்ட குல்தாபாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 15,749 ஆகும். அதில் 8,112 ஆண்கள் மற்றும் 7,637 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.97 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7.64 % மற்றும் 3.24 % ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 41.14%, இசுலாமியர் 58.08% மற்றும் பிற சமயத்தினர் 0.74% ஆக உள்ளனர். [3] இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia