கூகுள் தொலைக்காட்சி (பேச்சு வழக்கில் கூகுள் டி..வி.) என்பது இணைய இணைப்புடன் கூடிய ஒரு தொலைக்காட்சி ஆகும். இத்திட்டம் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சி ஆனது கூகுள், இன்டெல், லாகிடெக், சோனி ஆகிய நிறுவனத்தாரின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். இந்தத் தொலைக்காட்சியானது ஆண்ட்ராய்டுஇயக்க அமைப்பையும்கூகுள் குரோம்இணைய உலவியையும் கொண்டு ஒரு புதுவிதத் தொலைக்காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.[1] சோனி நிறுவனமும் லாகிடெக் நிறுவனமும் கூகுள் தொலைக்காட்சியை அக்டோபர் 6, 2010 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன.[2]
கூகுள் தொலைக்காட்சியின் முதல் தலைமுறைக் கருவிகள் எக்ஸ்86 எனும் செயலி நிரலாக்க இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனை உருவாக்கி, விளம்பரப்படுத்தியது லாகிடெக், சோனி நிறுவனங்கள் ஆகும். இதன் இரண்டாம் தலைமுறை கருவிகள் ஏ ஆர் எம் கணியக்கட்டமைப்பு செயலி (கணினியியல்) அடிப்படையாகக் கொண்டது. இதனை எல் ஜி , சேம்சங், விஷியோ, ஹைசென்ஸ்,ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் உருவானது.
2013 ஆம் ஆண்டில் நெட்கியர், டி சி எல், ஆசஸ் ஆகிய நிறுவனங்களின் கருவிகளிலும் கூகுள் தொலைக்காட்சியைக் காணக்கூடிய வசதிகள் கிடைத்தன. அதில் சில முப்பரிமாண வெளி வசதியும் கொண்டிருந்தன.
2014 ஆம் ஆண்டில் கூகுள் தொலைக்காட்சி ,ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைத்தன. அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படத் தொடங்கியது.
உருவாக்கம்
ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கூகுள் தொலைக்காட்சித் திட்டம் நடந்து வருவதாக ஊடகங்கள் மார்ச்சு 2010 ஆம் ஆண்டிலிருந்தே செய்திகள் வெளியிட்டன. இருந்தபோதிலும் பங்குதாரர்கள் இதனை உறுதிப்படுத்தாமலேயே இருந்தனர்.[3][4][5]
சிறப்புக் கூறுகள்
சோனி இணையத் தொலைக்காட்சி
கூகுள் தொலைக்காட்சியானது கூகுளின் தற்போதைய அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விடச் சிறந்து விளங்குகிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பானது தொலைக்காட்சியின் அடிப்படையாகும். இது உருவாக்குனர்கள் பலவிதமான பயன்பாடுகளை உருவாக்கவும் அதன்மூலம் தொலைக்காட்சி அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. கூகுள் குரோம் இணைய உலவியானது தொலைக்காட்சியிலிருந்தே இணையத்தை அணுகப் பயன்படுகிறது. வாடிக்கையாளர்கள் எச்பிஓ, சிஎன்பிசி போன்ற வழங்குனர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெறவும் இது உதவுகிறது. மேலும் கூகுள் தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் தனிச்சிறப்பான வழியில் ஆக்கங்களைப் பெற்றிட பயன்பாடுகளைத் தயாரித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக நெற்ஃப்ளிக்சு எனும் பயன்பாடானது வாடிக்கையாளர்கள் நெற்ஃப்ளிக்சு நிறுவனத்தின் காணொளிக் காப்பகத்தை (Video library) அணுகி அதிலிருந்து தேவையான படங்களைப் பார்க்க வழி செய்கிறது. ஆண்ட்ராய்டு கைபேசிகளும் ஆப்பிள் கைபேசிகளும் கூகுள் தொலைக்காட்சிக்குத் தொலையியக்கியாகப் (Remote control) பயன்படுத்தப்படலாம். கூகுள் தொலைக்காட்சியானது கம்பியில்லாத் தொலையியக்கி, முழுமையான ஆங்கில விசைப்பலகையுடன் (QWERTY) சந்தைக்கு வருகிறது.
இது கணினியில் உள்ளது போன்றே நாம் அன்றாடம் பயன்படுத்தும் முகநூல் போன்றவற்றை முகப்புப் பக்கமாக பயன்படுத்தலாம். இந்த முகப்புப் பக்கமானது நாமே வடிவமைக்கும் வகையில் உள்ளது. அதனால் நம்மால் அடிக்கடி பார்க்கப்படும் தொலைக்காட்சி வரிசைகள், அடிக்கடி பயன்படுத்தப்படும் மென்பொருட்கள், இணையதளங்கள் ஆகியவற்றை முகப்புப் பக்கத்தில் வைக்க இயலும்.
சாதனங்கள்
முதல் தலைமுறை
சோனி இணையத் தொலைக்காட்சி - 24", 32", 40", 46" அளவுகளில்.[6] (என் எஸ் எக்ஸ் -24 ஜிடி 1 )
சோனி இணையத் தொலைக்காட்சி - 24",32",40",46" அளவுகளில். புளூ ரே[7]
புளூம்பெர்க்கின் அறிக்கைப்படி தோசிபாவும் விசியோவும் 2011ஆம் ஆண்டின் வாடிக்கையாளர் மின்னணுவியல் கண்காட்சியில் (Consumer Electronics Show) தத்தமது கூகுள் தொலைக்காட்சிக்கான சாதனங்களை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[15]
முன்னேற்றங்கள்
மார்ச் 2010- கூகுள் தொலைக்காட்சிக்கான வேலைகள் சென்றுகொண்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வந்தன. இருந்தபோதிலும் அதன் பங்கு நிறுவனங்களில் இருந்து உறுதிபடுத்தப்படவில்லை.[16][17][18]
மே 20,2010- இத்திட்டம் ஆனது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.[19][20]
மே 2010- சோனி நிறுவனம் கூகுள் தொலைக்காட்சியுடன் கூடிய சோனி இணையத் தொலைக்காட்சியானது 2010 ஆம் ஆண்டில் வரும் எனக் கூறியது..[21][22]
2010 டிசம்பர் 15 – கூகுள் நிறுவனம் கூகுள் தொலைகாட்சிக்கான முதல் இற்றையை வெளியிட்டது. அதில் நெற்ஃபிளிக்சு, இருமுகப் பயன்பாடு, ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைபேசிகளின் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[23]
மே 2011- ஆண்ட்ராய்டு இயங்குதளம் 3.1 இல் செயல்படும் வகையில் இற்றைப்படுத்தப்பட்டது.[23]
சூன் 18,2011- கூகுள் சேஜ் தொலைக்காட்சியைக் கையகப்படுத்தியது.