கொட்டகலை06°55′47″N 80°36′17″E / 6.92972°N 80.60472°E
கொட்டகலை (Kotagala) இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 35.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது.இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அட்டன், தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய வழங்கல் நிலையமொன்று இங்கே அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் கொட்டகலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia