வத்தேகாமம்7°21′4″N 80°41′0″E / 7.35111°N 80.68333°E
வத்தேகாமாம் அல்லது வத்தேகமை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் பாததும்பறை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரசபையாகும். வத்தேகாமம் வட்டச் செயலாளர் பிரிவில் காணப்ப்டும் முக்கிய நகரமும் வியாபார மையமுமாகும். வத்தேகாமம் நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. புவியியலும் காலநிலையும்வத்தேகாமம் மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. மக்கள்இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
கைத்தொழில்இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. குறிப்புகள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia