கோரையாறு (திருவாரூர் மாவட்டம்)கோரையாறு (Koraiyar River) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் ஒரு வற்றாத ஆறாகும்.[1] சோழநாட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கிய காவேரி வடிநிலத்தின் தெற்குப் பகுதியில் இந்த ஆறு உள்ளது. கோரையாறானது வெண்ணாற்றின் கிளை ஆறாகத் தொடங்குகிறது. அங்கு இந்த ஆறு நீடாமங்கலம் வட்டத்தில் நீடாமங்கலத்தின் வடமேற்கே பிரிகிறது. வெண்ணாற்றிலிருந்து கிளைத்த பிறகு, அது தென்கிழக்கே நீடாமங்கலத்தின் தென்மேற்கே பாய்கிறது. சிறிது தூரம் தென்கிழக்கே தொடர்ந்து ஓடி பின்னர் கிழக்கு நோக்கி கூர்மையாகத் திரும்புகிறது. சிறிது தூரம் இந்த கிழக்குப் பாதையைப் பின்பற்றிய பின்னர் பொடக்குடிக்கு மேற்கே தெற்கு நோக்கித் திரும்புகிறது. மன்னார்குடி வட்டம் வழியாக தெற்குப் பாதையைப் பின்பற்றி பின்னர் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தில்லைவிளாகத்திற்கு வடக்கே தென்மேற்கே திரும்புகிறது. முத்துப்பேட்டைக்கு கிழக்கே பாய்ந்து, தென்கிழக்கே திரும்பி, பின்னர் முத்துப்பேட்டை கடற்காயலில் கலக்கிறது.[2][3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia