தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம்ம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே சமமான ஆற்றுநீர் பகிர்வைக் கோருதல்.
2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள் (2018 Tamil Nadu protests for Kaveri water sharing) என்பது காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு குறித்தான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து, தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களைக் குறிக்கும். இத்தீர்ப்பை, அந்நீதிமன்றம் இந்திய மாநிலங்களுக்கு வழங்கியது. குறிப்பாக தமிழகத்திற்கும்,கருநாடகத்திற்கும் இடையில் நிலவும் ஆற்று நீர் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வழங்கியது. இந்திய உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக அமைக்காமல் நடுவண் அரசு தள்ளிப்போடுதலால் தோன்றியது ஆகும். இந்த வாரியம் அமைந்தால், மேற்கூறப்பட்ட இரு இந்திய மாநிலங்களுக்கும் சமமான ஆற்று நீர் பகிர்வானது, அந்த இரு மாநிலங்களுக்கு இடையில் பிணக்கு இல்லாமல் நடைபெறுவதற்கான, இறுதியான இந்திய அரசு செயல் முறையாக கருதப்படுவதால், இம்மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள காலதாமதத்தைத் தமிழ்நாட்டினர் எதிர்க்கின்றனர்.[1]
காவிரி நீர் பங்கீட்டுப் பிணக்கு
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு பிணக்கில் நான்கு இந்திய மாநிலங்கள் தொடர்ப்புடையன என்றாலும், முக்கிய காரணிகளாக இருக்கும் மாநிலங்கள், தமிழ்நாடும், கர்நாடகமும் தான் . இப்பிணக்கு 114 வருடங்களாக இருப்பதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய விடுதலைக்குப் பிறகு, இதற்கு முன் 27 ஆண்டுகளாக இந்திய உச்ச நீதி மன்றமும், 17 வருடங்கள் காவிரி நடுவர் நீதி மன்றமும், இதுவரை 528 அமர்வுகளின் இரு மாநில அறிவியலாளர்களும், உழவர்களும் தங்களது முறையான எண்ணங்களை வெளியிட்டு இருந்தும், இவை குறித்த பொறியியலாளர்கள் விசாரணை அறிக்கைகளும், எந்தவித நிலையான அமைதிப் போக்கினையும் உருவாக்கவில்லை என்பது வரலாறு ஆகும்.
இந்திய உச்சநீதி மன்றமும், போராட்ட பின்னணியும்
காவிரி ஆற்றுநீர்ப் பிரச்சினையில் தனது இறுதித் தீர்ப்பினை பிப்ரவரி 12 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. 6 வார காலத்தில் 'வரையறுக்கப்பட்ட திட்டம்' (Scheme) ஒன்றினை இந்திய ஒன்றிய அரசு நிர்மாணிக்க வேண்டும் என உத்தரவு இட்டது.[2] 6 வார காலம் என்பது மார்ச் 29 அன்று முடிவடைந்த நிலையில், இது குறித்தான எவ்வித அறிவிப்பும் , இந்திய ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் போராட்டங்கள் உருவெடுத்தன.
போராட்டங்களின் காலக்கோடு
மார்ச்சு, 2018
மார்ச்சு 30 - மார்ச்சு 31
மார்ச்சு 30 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரு நாள் முழு அடைப்பினை தமிழகத்தில் கடைப்பிடிக்க வேண்டுமென 'காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு' தீர்மானம் இயற்றியது.[3] விவசாயச் சங்கங்கள் பலவற்றை உள்ளடக்கியது இவ்வமைப்பாகும்.
மார்ச்சு 31 - தீர்ப்பினை செயல்படுத்த 3 மாத கால நீட்டிப்புக் கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வரவிருப்பதால், இந்நேரத்தில் திட்டம் பற்றி அறிவிப்பது சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றாது ஒன்றிய அரசு அவமதித்துவிட்டதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.[4]
ஏப்ரல், 2018
ஏப்ரல் 1 - ஏப்ரல் 7
ஏப்ரல் 1 - மக்கள் ஒன்றுகூடி போராட்டம் தொடங்கிவிடுவார்களோ எனும் அச்சத்தில் ஏறத்தாழ 1,000 காவல்துறையினர் சென்னைக் கடற்கரைப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகள் மக்களின் பயன்பாட்டிற்கு மறுக்கப்பட்டன.[5]
ஏப்ரல் 2 - காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத ஒன்றிய அரசு குறித்தான கவனத்தைக் கொண்டுவரும் வகையில் மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென விவசாயச் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.[6]
ஏப்ரல் 3 - ஆளும் அதிமுக கட்சியினர், ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.[7] சென்னை கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது.[8]
ஏப்ரல் 4 - திருநெல்வேலியில் கட்சிகளின் சார்பாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.[9]
ஏப்ரல் 5 - திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த 'மாநிலம் தழுவிய முழு அடைப்பு' காலை முதல் மாலை வரை கடைப்பிடிக்கப்பட்டது.[10][11]
ஏப்ரல் 6 - தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி. கே. வாசனுடன் அக்கட்சி உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திருச்சியில் உண்ணாவிரதம் இருந்தனர்.[12]
ஏப்ரல் 7 -
ஏப்ரல் 8 - 14
ஏப்ரல் 8 -
ஏப்ரல் 9 -
ஏப்ரல் 10 - தமிழ்நாடு எண்மருவி ஊடக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.[13]
ஏப்ரல் 11 - பாமக தலைமையில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் 'மாநிலம் தழுவிய முழு அடைப்பு' காலை முதல் மாலை வரை கடைப்பிடிக்கப்பட்டது.[14]
காவிரி உரிமை மீட்புப் பயணம்
ஏப்ரல் 7 - திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து துவக்கினர்.[15][16]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு
ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 10 அன்று காலை முதல் போராட்டங்கள் நடந்தன.[17] சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டரங்கத்திற்கு வெளியிலும், அரங்கத்தினுள் போட்டியின் நடுவிலும்[18][19] போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.[20]
மே, 2018 நிகழ்வுகள்
காவிரி ஆற்று நீர் சச்சரவில், தமிழ்நாடு அரசாங்கம் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (CONTEMPT PETITION (CIVIL) NO. 898 OF 2018 IN CIVIL APPEAL NO. 2453 OF 2007) தொடர்ந்துள்ளது.அதில் காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்துள்ளார். அத்தாக்கலை, இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே அளித்தத் திட்டத்தை மாற்றி அமைத்தது. அதன்படி முதலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், அமைய உள்ள விவரத்தினைக் காண்போம்.
இம்மேலாண்மை வாரியத்தின் அமைப்பு
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும், 16 பிப்ரவரி 2018 தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் திருத்தப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வதற்கு, இந்த ஆணையத்திற்கு முழு அதிகாரமளிக்கப்படும். மேலும், அவற்றை செய்ய கடமைப்பட்டிருக்க வேண்டும்.
காவிரி ஆற்று நீரின் சேமிப்பும், பகிர்வும், அதற்கான ஒழுக்குமுறைளையும், கட்டுப்பாடுகளும் பேணுதல்.
ஒழுங்குமுறைக் குழுவின் உதவியுடன் நீர்த்தேக்கங்களின் செயல்பாட்டு மேற்பார்வை மற்றும் நீர் வெளியீடுகளை ஒழுங்குபடுத்துதலும் ஆகும்.
கர்நாடகா, தமிழகத்தின் பொதுவான எல்லையில் அமைந்திருக்கும் மாநிலங்களுக்கிடையேயான சந்திப்பு புள்ளி, தற்போது அறியப்பட்டுள்ள இடமான பிலிகுண்டுலு அளவுமானி (gauge)யையும், வெளியீட்டு நிலையமும்(discharge station) வெளியீட்டை ஒழுங்குபடுத்துதல் வேண்டும்
இந்த ஆணையத்தின் மொத்த செலவில் 40 சதவீதம் கர்நாடகமும், 40%தமிழ்நாடும், 15% அளவு கேரளமும், 5 சதவீதம் புதுச்சேரியும் ஏற்றுக் கொள்ளப்ட வேண்டும் என்கிறது. இக்கூற்றும் பின்னால் சச்சரவுகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.
அந்நீர் மேலாண்மை வாரியத்தின் முக்கிய கூறுகள்
அவ்வாரியம் நிலையானதொரு நிறுவனமாக, ஒரேஅமைப்பாக இருக்க வேண்டும். இந்த ஆணையம் வழக்குத் தொடரவும், ஆணையத்தின் மீது வழக்குத் தொடரவும் இயலும்.
ஆணையத்தின் உறுப்பினர்களாக,
தலைமைப் பொறியாளர் ஒருவர் இரு மாநிலங்களின் தேவைகளையும் தெளிவுற அறிந்தவராக இருக்க வேண்டும். நீர்பாசனங்களுக்கான கட்டுமான அறிவும், பரந்த அனுபவமும் கொண்ட அவர் சிறந்த பராமரிப்பு பொறியாளராக இருக்க வேண்டும். மேலும், இந்திய அரசின் கூடுதல் செயலாளர் பணிக்கு இணையான திறன் மிக்க இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இருக்க வேண்டும். இவரது பதவிக்காலம் 65 வயது வரை அல்லது ஐந்தாண்டுகள் இரண்டில் எது முன்னமோ அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இரண்டு முழுநேர உறுப்பினர்கள் நடுவண் அரசால் நிலையானப் பணியாளாக அமைக்க வேண்டும்.
அவற்றில் ஒரு உறுப்பினர், நீர் ஆதாரங்கள் - மத்திய நீர் பொறியியல் சேவைகள் பணியிலிருந்து (Central Water Engineering Services) தலைமை பொறியாளர் பதவிக்கு, கீழ் பணியாதவராக இருக்க வேண்டும்.
மற்றொரு உறுப்பினர், வேளாண் மற்றும் விவசாய அமைச்சகத்தின் ஆணையாளர் பதவிக்கு சமமானவராக இருக்க வேண்டும்.
இவர்களுடன், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டும். நீர்வள ஆதாரங்கள், நதி வளர்ச்சி, கங்கா புனரமைப்பும், வேளாண் மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் கூடுதல் செயலர் பதவிக்கு குறையாத நடுவண் அரசின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் கொண்ட மாநிலங்களிலிருந்து, நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். அந்த நான்கு உறுப்பினர்களும் முறையே கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து அமர்த்தப்பட வேண்டும்.
ஆணையத்தில் ஒரேயொரு செயலாளர் இருப்பார். அவர் நடுவண் அரசின் நீர் பொறியியல் சேவைகள் பணி தலைமை பொறியாளர் பதவிக்கு குறையாதவராக இருப்பார். அவரது பதவிக்காலம், மூன்று முதல் 5 ஆண்டுகள் காலம் ஆகும். இருப்பினும், இவர் நீடிக்கக்கூடிய நடுவண் அரசால் நியமிக்கப்படக்கூடிய ஒரு பொறியாளர் ஆவார். இத்தகைய செயலாளருக்கு வாக்களிக்கும் உரிமைகள் கிடையாது.
குறைநிறைவெண்ணும், வாக்களித்தலுக்கும் (Quorum and Voting) ஆறு உறுப்பினர்கள் இருப்பர். ஒரு குறைநிறைவெண்ணை உருவாக்க வேண்டும். மேலும், அன்றாட செயல்களைத் தவிர, ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு பெரும்பான்மையின் ஒருமித்த அனுமதி தேவை. அனைத்து. உறுப்பினர்களும், சமமான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
குறைநிறைவெண்ணுக்காக, ஓட்டெடுப்பை தள்ளி வைக்கும் சூழ்நிலையில், அடுத்த கூட்டம் மூன்று நாட்களுக்குள் கூட்டலாம், அந்த கூட்டத்திற்கு, குறைநிறைவெண் அவசியமில்லை என்ற விதி செயற்படும்.
கர்நாடக அரசின் நிலைப்பாடு
இ்ந்த புதிய திட்டத்தினை, கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவண் அரசாங்கமான மதசார்ப்புள்ள பா. ஜ. க. ஆட்சியைப் கைப்பற்ற வில்லை. மதசார்ப்பு அற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணி, கர்நாடக அரசைக் கைப்பற்றி உள்ளதும், இப்புதிய போக்குக்குக் காரணமாகும்.