கோவிலடி, தஞ்சாவூர்
கோவிலடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 81.79 மீ. உயரத்தில், (10°50′25″N 78°53′07″E / 10.8404°N 78.8853°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அன்பில் என்ற ஊரிலிருந்து சுமார் நான்கு கி. மீ. தூரத்தில் கோவிலடி புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் , கோவிலடி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 3,700 ஆகும். இதில் 1,829 பேர் ஆண்கள் மற்றும் 1,871 பேர் பெண்கள் ஆவர்.[3] சமயம்இந்துக் கோயில்கள்தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வரும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அப்பால ரெங்கநாதர் கோயில் என்ற பெருமாள் கோயில் மற்றும் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றான திவ்யஞானேசுவரர் கோயில் ஆகியவை கோவிலடி ஊரில் அமைந்துள்ளன.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia