சந்திரகாந்த் கவ்லேகர்
சந்திரகாந்த் கவ்லேகர் (Chandrakant Kavlekar)(பிறப்பு 7 மே 1971) என்பவர் சந்திரகாந்த் 'பாபு' கவ்லேகர் என்றும் அழைக்கப்படுபவர் கோவா மாநில இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவாவின் முன்னாள் நகர மற்றும் கிராம திட்டமிடல், விவசாயம், காப்பகங்கள், தொல்லியல், தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறை அமைச்சராக உள்ளார்.[1] இவர் கோவா சட்டமன்றத்தில் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.[2] இவர் குயுபெம் தொகுதியைச் சார்ந்தவர்.[3][4][5] 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரகாஷ் வெலிப்பை எதிர்த்து பாபு கவ்லேக்கர் வெற்றி பெற்றுத் தொடர்ந்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019, சூலை 11 அன்று, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். சூலை 13, 2019 முதல் இவர் கோவா மாநில துணை முதல்வராக இருந்தார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia