சமையல் நிகழ்ச்சிசமையல் நிகழ்ச்சி (Cooking show) எனப்படுவது தொலைக்காட்சி நிகழ்ச்சி நிகழ்ச்சி வகைகளில் ஒன்றாகும். இது உணவு தயாரிக்கும் முறையை பற்றி சமையலறை அல்லது ஒரு அரங்கில் எடுக்கப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் சமையல் கலைஞர்கள் அல்லது பிரபலங்கள் கலந்து கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேலான வகை வகையான உணவுகளை சமைப்பார்கள். இந்த நிகழ்ச்சி போட்டியாகவும் நடைபெறும் வழக்கம் உண்டு. தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த காலங்களில் தினமும் 30 நிமிடங்கள் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் வழக்கம் இருந்ததது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களுடன் ஒரு உரையாடலுடன் சமையல் செய்யும் நிகழ்ச்சியாக சமையல் சமையல் என்ற நிகழ்ச்சி இருந்து வந்தது. அதற்கு பிறகு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒரு பிரபல நடிகர் அவருக்கு பிடித்தமான உணவை சமைத்து வேறு ஒரு பிரபலத்திற்கு பரிசாக கொடுக்கும் நிகழ்ச்சியாக செலிபிரிட்டி கிச்சன் என்ற சமையல் நிகழ்ச்சி இருந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஞ்சறை பெட்டி என்ற நிகழ்ச்சி 1500 மேலான அத்தியாயங்களுடன் ஒளிபரப்பானது. அல்லது சாமானிய மக்கள் வீட்டில் சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து சமைக்கும் நிகழ்ச்சியாக உங்கள் வீட்டில் எங்கள் செஃப் என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010ஆம் ஆண்டு காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் முதல் முதலில் சமையல் போட்டி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு வார நாட்களில் 60 நிமிடங்கள் ஒளிபரப்பானது. 10 அல்லது 12 பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களின் சமையல் திறனை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக கிச்சன் சூப்பர் ஸ்டார்[1][2][3] மற்றும் குழந்தைகள் பங்குகொள்ளும் கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இதற்க்கு விதிவிலக்கு. தொடர்கள்தமிழில் சமையல் சார்ந்த தொடர்கள் எடுப்பது மிகவும் குறைவு. முதல் முதலில் ஆல் இன் ஆல் அலமேலு என்ற தொடர் கே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து சரிகம கமகம மற்றும் மசாலா போன்ற தொடர்கள் ஒளிபரப்பானது. 2013ஆம் காலத்தில் புதுயுகம் தொலைக்காட்சியில் கொரியன் மொழி தொடரான பாஸ்தா என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமானது.
சமையல் நிகழ்ச்சிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia