கே தொலைக்காட்சி
கே தொலைக்காட்சி என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான தமிழ் மொழி 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 22, 2001 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.[1] கே தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை டிசம்பர் 11, 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[2] வரலாறுகே தொலைக்காட்சியில் உள்ள கே என்ற எழுத்து கொண்டாட்டம் என்பதை குறிக்கும். இது சன் டிவி நெட்வொர்க்கின் தலைவரான கலாநிதி மாறன்[3] என்பவரால் 22 அக்டோபர் 2001 அன்று தொடங்கப்பட்டது. இந்த அலைவரிசை உருவாக்கியப்பொழுது சன் குழுமத்திடம் 5000 இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள்தினமும் காலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மார்னிங்க் ஷோ" என்ற பெயரிலும் மதியம் 1.00மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மேட்னீ ஷோ" என்ற பெயரிலும் 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "இவினிங்க் ஷோ" என்ற பெயரிலும் ஒளிப்பரப்பாகுகிறது.வெள்ளிக்கிழமை இரவில் ஒளிப்பரப்பாகும் படம் வெள்ளி சுப்பர்ஹிட் இரவுக் காட்சி என நிகழ்ச்சிகள் பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia