சரவாக் மலாய் மொழி
சரவாக் மலாய் மொழி (மலாய்: Bahasa Melayu Sarawak அல்லது Bahasa Sarawak,; ஆங்கிலம்: Sarawak Malay Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மலாய் மொழியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் மொழியாகும். சரவாக் மலாய்க்காரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மொழியாவும் விளங்குகிறது. அத்துடன் சில சூழ்நிலைகளில் சரவாக்கின் பூர்வீக மக்களுக்குள்; குறிப்பாக மலாய் (Malay People) மற்றும் மெலனாவு மக்களுக்கு (Melanau People) இடையே ஒரு வழக்கு மொழியாகவும் (Lingua Franca) செயல்படுகிறது.[1] பொதுசரவாக் மாநிலத்தின் இலிம்பாங் மாவட்டம் (Limbang District) மற்றும் இலாவாசு மாவட்டம் (Lawas District) ஆகிய மாவட்டங்களில் அதிகமாய்ப் பேசப்படும், இந்த சரவாக் மலாய் மொழி, புரூணை மலாய் மொழியுடன் (Bruneian Malay) தொடர்பு உடையது.[2] மேலும் இந்த மொழி இந்தோனேசியா மாநிலத்தின் மேற்கு கலிமந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பேசப்படும் சங்காவு மலாய் (Sanggau Malay), சிந்தாங் மலாய் (Sintang Malay) மற்றும் செகாடாவு மலாய் (Sekadau Malay) ஆகியவற்றுடன் வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. பேச்சு வழக்குகள்சுமத்திரா (Sumatra) மற்றும் மலாயா தீபகற்பத்தின் (Malayan Peninsula) மலாய் பேச்சு வழக்குகளுடன் ஒப்பிடும் போது, இந்த மொழி இபானிய மொழிகளுடன் (Ibanic Languages) மிகவும் பொருந்திப் போகிறது. அதே வேளையில் சரவாக்கிற்கு வெளியே உள்ள சாதாரண மலாய் மொழியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.[3] சரவாக் மலாய் மொழி மூன்று கிளைமொழிகளாகப் பிரிக்கப் படலாம்:[4]
மேற்கோள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia