சவாலே சமாளி (2015 திரைப்படம்)
சவாலே சமாளி (Savaale Samaali) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1], நாசர், ஜெகன் , கருணாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்க, தமன் இசையமைத்தார். படத்தின் பணிகள் 2014 சூன் மாதத்தில் கெக்க பொக்க என்ற தற்காலிகப் பெயரில் துவங்கியது.[2][3][4] பின்னர் 4 செப்டம்பர் 2015 அன்று படம் வெளியானது.[சான்று தேவை] நடிகர்கள்
தயாரிப்புஅசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்க சத்தியசிவா இயக்கும் படத்தை அருண் பாண்டியன் தயாரிப்பதாக 2014 மே மாதம் அறிவிக்கப்பட்டது.[5] இப்படத்தின் தயாரிப்பு பணிகள் 2014 சூனில் தொடங்கியது. சத்தியசிவாவின் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தெகிடி (2014) இன் வெற்றிக்கு பிறகு 40 க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்ததாக அசோக் செல்வன் தெரிவித்தார்.[6] இசைஇந்த படத்திற்கு தமன் இசையமைத்தார். அவர் இசையமைப்பில் சினேகன் எழுதிய ஐந்து பாடல்கள் இடம்பெற்றன.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia