பிந்து மாதவி
பிந்து மாதவி (தெலுங்கு: బిందు మాధవి) ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொழில்ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி.[1] அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார்.[1] பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார்.[2] வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.[1][3] கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.[1][2] டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்குத் திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது.[1][4] இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை.[5] தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குநர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.[4] அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.[3] திரைத்துறைதொலைக்காட்சி
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia