சாங்கோ அன்செயின்டு (ஆங்கிலம்:Django Unchained) (உச்சரிப்பு /ˈdʒæŋɡoʊ/) 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் குவெண்டின் டேரண்டினோ ஆல் இயக்கப்பட்டது. ஜேமி பாக்ஸ், கிறிஸ்டாஃப் வால்ட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திசம்பர் 25, 2012 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.[5][6]
இத்திரப்படம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. மேலும் ஐந்து அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கிறிஸ்டாஃப் வால்ட்ஸ் தன் நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றார், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது குறிப்பிடத்தக்கது.[7] டேரண்டினோ சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதினை வென்றார். இதே பகுப்பில் இது அவரது இரண்டாம் அகாதமி விருதாகும். முதல் அகாதமி விருது பல்ப் ஃபிக்சன்திரைப்பட திரை இயக்கத்திற்காக வாங்கினார். இத்திரைப்படம் $422 மில்லியன் வருவாயினை ஈட்டியது.
1850களில் கதை அமைந்துள்ளது. விடுதலையடைந்த அடிமை(பாக்ஸ்) தன் மனைவியையினை அடிமையாளனிடமிருந்து மீட்க வால்ட்சுடன் சேர்ந்து போராடுகிறான்.