சாப்ரா சட்டமன்றத் தொகுதி
சாப்ரா சட்டமன்றத் தொகுதி (Chapra, Bihar Assembly constituency)(சப்ரா என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான பீகாரில் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 36 சட்டமன்றத் தொகுதிகளில் சாப்ராவும் ஒன்றாகும்.[1][2] கண்ணோட்டம்1967 முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ராஜ்புத் அல்லது யாதவ் இனத்தினைச் சார்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சாப்ரா சட்டமன்றத் தொகுதி ஒரு தனித்துவமான தனித்துவத்தைக் கொண்டுள்ளது. எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தும் சாதி வைசியா ஆகும். வைசிய சமூகத்தினர் மொத்தமுள்ள 2.8 லட்சம் வாக்காளர்களில் 65,000 பேர் ஆவர். வைசிய சமூகத்தினரின் மக்கள்தொகை சாப்ராவில் 10-12% ஆகும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை 2008-ன் படி, எண் 118 சாப்ரா சட்டமன்றத் தொகுதி பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. சாப்ரா நகராட்சி மற்றும் நைனி, பக்குலி, கரிங்கா, சதா, மௌனா, தெனுவா மற்றும் பர்காரா மகாஜி கிராம ஊராட்சிகள் சாப்ரா சமூக மேம்பாட்டு தொகுதி ரிவில்கஞ்ச் சிடி பகுதி.[3] சாப்ரா சட்டமன்றத் தொகுதி எண் 20 சரண் (மக்களவை தொகுதியின்ஒரு பகுதியாகும்.[3] இது முன்பு சாப்ரா மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 1965 முதல் 2014 வரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ராஜ்புத் அல்லது யாதவ் இனக்குழுவினர் இச்சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவத்தைக் கொண்டிருந்தது.[4] இரந்தீர் குமார் சிங் (இராச்டிரிய ஜனதா தளம்) 2014-இல் சாப்ரா தொகுதியில் வெற்றி பெற்றார்.[5][6] முதல் முறையாக, யாதவ் அல்லது இராஜ்புத் அல்லாத சமுகத்தினைச் சார்ந்த மருத்துவர் சி. என். குப்தா (பாஜக) 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[7][8][9] சட்டமன்ற உறுப்பினர்கள்
^ இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள்2020
2015
2014 தேர்தல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வார்ப்புரு:Vidhan Sabha constituencies of Biharவார்ப்புரு:Saran Division topics25°47′05″N 84°43′39″E / 25.78472°N 84.72750°E |
Portal di Ensiklopedia Dunia