சாவித்திரி (1980 திரைப்படம்)
சாவித்திரி (Savithiri) இந்தியாவில் வெளியான தமிழ்மொழி நாடகத் திரைப்படமாகும். இயக்குநர் பரதன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான பிராயணம் என்ற படத்தின் மறு ஆக்கமாகவும் தமிழகத் திரைப்படத் துறையில் பரதனுக்கு அறிமுகத் திரைப்படமாகவும் சாவித்திரி அமைந்தது. நடிகர்கள் வினோத், மேனகா, சே. வி. ரமண மூர்த்தி, மனோரமா, நந்திதா போசு மற்றும் குரு சுரேசு ஆகியோர் நடித்துள்ளனர். பத்மராசன் திரைக்கதையையும் முழு படத்திற்கான உரையாடல்களையும் எழுயுள்ளார். ம. சு. விசுவநாதன் இயசையமைத்த பாடல்களுக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1] பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களின் சித்தரிப்புக்காக படம் வெளியானவுடன் சர்ச்சைக்குள்ளானது. இது சென்னை சமூகத்தின் உறுப்பினர்களால் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.[2] நடிகர்கள்
ஒலிப்பதிவுபடத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[3][4] கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia