சித்தா
சித்தா (திரைப்படம்)(Chithha) என்ற தலைப்பு சித்தப்பா என்பதன் சுருக்கம். இத்திரைப்படத்தினை இயக்கியவர் அருண்குமார் ஆவார்.[1] அப்பாவின் தம்பியே சித்தப்பா. சித்தப்பாவின் உணர்வுபூர்வமான பாசத்தை இந்தத் திரைப்படம் பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2023 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றது இத் திரைப்படம். பழனியைச் சேர்ந்த அரசு ஊழியரான ஈசுவரன் தனது அண்ணன் இறந்த பிறகு அவருடைய மகள் சுந்தரி தாயார், அண்ணியுடன் வசித்து வருகிறார். அவர் தனது சகோதரரின் குடும்பத்தினருடம் மிகுந்த பாசத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றார். குறிப்பாக சுந்தரி மீது அதிக அன்பு செலுத்துகிறார், எப்போதும் அவளைப் பாதுகாத்து வருகிறார். ஒரு நாள் திடீரென சுந்தரி ஒரு மோசமான சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் மற்றும் பலாத்காரத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர்களால் கடத்தப்படும்போது, இவரது வாழ்க்கை மாறுகிறது, இறுதியில், பழி அவர் மீதே விழுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia