சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை (Chinna Annamalai, ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பதிப்பாளர் ஆவார்[1].[2] பெயர்க் காரணம்1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி. கே. சி., கலில், டி. எஸ். சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகத்தின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5] வாழ்க்கை வரலாறுசிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். திருவாடானை சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். சிவாஜி கணேசனின் தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் இறந்தார்.[6] திரைப்படத் துறையில்"தங்கமலை ரகசியம்", "நான் யார் தெரியுமா", "தர்மராஜா" போன்ற படங்களின் கதாசிரியராக சின்ன அண்ணாமலை இருந்துள்ளார். வெற்றிவேல் பிலிம்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி "பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்", "ஆயிரம் ரூபாய்", "ஜெனரல் சக்ரவர்த்தி", "தர்மராஜா", "கடவுளின் குழந்தை" உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளர்.[7] இயற்றியுள்ள நூல்கள்
வெளியிட்ட நூல்கள்சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:
நடத்திய இதழ்கள்
இவற்றையும் காண்கஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia