ராம் சரண்
இராம் சரண் (பிறப்பு:27 மார்ச்சு 1988) தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.[1] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்படக் கலைக் குடும்பம் ஆகும். இவர் திசம்பர் 1 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்பட வாழ்க்கை2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருது வென்றார். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளியானது. 2009 ஆம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இராஜமௌலி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய வெற்றிதுடன் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது. மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஆரஞ்சு, 2012 ஆம் ஆண்டு ரச்சா, 2013 ஆம் ஆண்டு நாயக், 2014 ஆம் ஆண்டு ஏவடு போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் ஜன்சீர் என்ற ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் தூபேன் என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இவர் தற்பொழுது Govindudu Andarivadele என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.[2] திரைப்படங்கள்
விருதுகள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia