சிறிய துடுப்புவால் கரிச்சான்
சிறிய துடுப்புவால் கரிச்சான் (Lesser racket-tailed drongo)(டைகுருரசு ரெமிபெர் - Dicrurus remifer) என்பது டைகுருரிடே பறவை குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. விளக்கம்சிறிய துடுப்புவால் கரிச்சான் சுமார் 25 முதல் 27 ·5 செ.மீ நீளமானது. வெளிப்புற வால் இறகுகளைத் தவிர்த்து (சி. 30-40 செ.மீ வால் முடிவடையும்). ஆண்களின் சராசரி எடை 39-49 கிராமும், பெண் குருவியின் எடை 35·5-44 கிராம். இது துடுப்பு வால் கரிச்சானுடன் அடையாளங் காண்பதில் குழப்பமடையக்கூடும். ஆனால் இதன் தலையில் முகடு இல்லை. வகைபிரித்தல்சிறிய துடுப்பு வால் கரிச்சானில் அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் நான்கு உள்ளன [2]
பரவலும் மற்றும் வாழ்விடம்இது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia