சிறீனிவாசன்
சிறீனிவாசன் (Sreenivasan) (பிறப்பு: 1956 ஏப்ரல் 6) இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் முக்கியமாக பணியாற்றுகிறார்.[1] இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை சார்ந்த நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர். சந்தேசம், மழயேத்தும் முன்பே ஆகிய படங்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான இரண்டு கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார் . ஒரு எழுத்தாளராகவும், நடிகராகவும் இவர் பிரியதர்சன், சத்யன் அந்திகாடு, கமல் போன்ற இயக்குனர்களுடன் அடிக்கடி இணைந்து பணியாற்றியுள்ளார். ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, இவர் வடக்கு நோக்கியந்த்ரம் (1989), சிந்தவிசிடய்யா சியாமளா (1998) போன்றத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். வடக்கு நோக்கியந்த்ரம் (1989) என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. சிந்தவிசிட்டயா சியாமளா (1998) 29 வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த சமூகத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த பிரபலமான திரைப்பட விருதையும் வென்றது.[2] நடிகர் முகேசுடன் இணைந்து லூமியர் திரைப்பட நிறுவனத்தின் கீழ் கத பரயும் போல் (2007), தட்டத்தின் மரயத்து (2012) ஆகிய படங்களை இணைந்து தயாரித்திருந்தார். ஆரம்ப கால வாழ்க்கைஇவர் கேரளாவின் வடக்கு மலபார் பகுதியான கண்ணூர் பகுதியின் தலச்சேரி அருகே உள்ள பாட்டியம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.[3] இவரது தாயார் ஒரு இல்லத்தரசியாகவும், இவரது தந்தை பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.[4] தனது முறையான கல்வியை கூத்துப்பறம்பு நடுநிலைப் பள்ளியிலும், கடிரூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முடித்தார். பின்னர், மட்டனூர் பழசி இராஜா என்.எஸ்.எஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1977 ஆம் ஆண்டில், இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்தார்.[5] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் விமலா என்ற பள்ளி ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார். இவரது மூத்த மகன் வினீத் சீனிவாசன் ஒரு இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும், பிண்ணைக் குரல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவரது இளைய மகன் தயான் சீனிவாசன், தனது சகோதரர் இயக்கிய திரில்லர் திரைப்படமான திரா என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார்.[6] தயான் இயக்கிய லவ் ஆக்சன் டிராமா என்ற படம் நிவின் பாலியும், நயன்தாராவும் நடித்த ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia