திப்ருகார் மாவட்டம் அசாமில் உள்ளது. இதை டிப்ருகட் என அசாமிய மொழியினர் அழைக்கின்றனர். இதன் தலைமையகம் திப்ருகார் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 3381 சதுர கிலோமீட்டர் ஆகும்.
[1]
பொருளாதாரம்
தேயிலையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தேயிலைத் தொழிற்சாலைகளும் உள்ளன. சில
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் துலியாஜன் நகரில் உள்ளது. [2]துலியாஜன் ஆயில் நகரம் திப்ருகர் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அரிசி, கரும்பு, மீன் ஆகியவற்றை விளைவிக்கின்றனர்.
போக்குவரத்து
திப்ருகாரில் சீரான சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. நீர்வழியிலும், வான்வழியிலும் பயணிக்க வசதிகள் உள்ளன. திப்ருகர் ரயில் நிலையத்தின் மூலம் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்குச் செல்லலாம்.
சான்றுகள்
↑Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. ISBN978-81-230-1617-7. Retrieved 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)