கரம் சேத்திர முதுநிலைக் கல்லூரி, எடாவா கான்பூர் பல்கலைக்கழகம் (இளங்கலை, 1976), லக்னோ கிறித்துவக் கல்லூரி லக்னோ பல்கலைக்கழகம் (இளநிலை உடற் கல்வியியல், 1977)[4]
சிவபால் சிங் யாதவ் (Shivpal Singh Yadav)(பிறப்பு: பிப்ரவரி 16, 1955) என்பவர் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் பிறந்த இவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சிற்றப்பா ஆவார். இவர் 2007 முதல் 12 வரை எட்டாவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்நகர் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் (லோஹியா) [5] நிறுவனர் ஆவார்.
பணி
யாதவ், மாயாவதி ஆட்சியின் போது உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[6]
31 ஜனவரி 2017 அன்று, யாதவ் 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் கட்சியை உருவாக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் 28 செப்டம்பர் 2018 அன்று, பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.[7] இவரது கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 24, 2018 அன்று, அதிகாரப்பூர்வமாக பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) என்று பெயரில் ஒப்புதல் வழங்கியது.[8]