சிவலிங்கா (திரைப்படம்)
சிவலிங்கா (shivalinga) என்பது திகில்,சிரிப்பு தமிழ் (திரைப்படம்) ஆகும். இதனை இயக்கியவர் பி. வாசு ஆவார். மேலும் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது பி வாசு கன்னட மொழியில் இயக்கிய சிவலிங்கா திரைப்படத்தின் மொழிமாற்றம் (மறு ஆக்கம்) ஆகும்.இந்தத் திரைப்படம் சூலை, 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1][2] இதன் இறுதிக் காட்சியானது பி வாசு 1999 ஆம் ஆண்டு இயக்கிய மலபார் போலீசின் இறுதிக் காட்சியைப் போன்று உள்ளதாக கருத்து எழுந்தது. இத் திரைப்படம் இந்தியில் காஞ்சனா ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் வெளியானது. கதை மாந்தர்கள்
கதைச் சுருக்கம்ரஹீம் தன்னுடைய சாரா (புறா) உடன் ரயிலில் பயணம் செய்கின்றான். அந்த சமயத்தில் ஒரு கண்பார்வை அற்றவர் அதே ரயிலில் ஏற முற்படுகிறார். அவருக்கு ரஹீம் உதவி செய்கிறார். ஆனால் அவர் உண்மையான குருடன் அல்ல. அவன் ரஹீமை அந்த ரயிலிலிருந்து தூக்கி எறிந்து கொலை செய்கிறான். ஆனால் இது தற்கொலை என பதிவு செய்யப்படுகிறது. ரஹீமுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் சங்கீதா இது தற்கொலை இல்லை என நினைக்கிறார். அன்றைய தினம் இரவே ரஹீம் இவருடைய கனவில்தோன்றி தான் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறுகிறான். எனவே சங்கீதாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வழக்கானது சி ஐ டி க்கு செல்கிறது. சிவலிங்கேஷ்வரன் ஒரு நேர்மையான சி ஐ டி அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். அவர் சத்யாவைத் திருமணம் செய்கிறார். சத்யாவிற்கு திகில் கதைகளில் ஆர்வம் அதிகம். சிவா ரஹீமினுடைய வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் ஒரு சுடுகாட்டிற்குப் பக்கத்தில் குடியேறுகிறார்கள். அதே நாள் இரவில் சத்யாவிற்கு ஒரு குழந்தை உருவில் பேய் பயமுறுத்துகிறது. ஆனால் அந்த உருவத்தை சிவா பார்க்கவில்லை, எனவே இது சத்யாவின் பிரமையாக இருக்கலாம் என நினைக்கிறார். பட்டுகுஞ்சம் என்பவரை (வடிவேலு) பணியாளாக வேலைக்கு அமர்த்துகிறார். அவர் அந்த வீட்டிற்குத் திருட வந்தவர். பின்பு சிவா, ரஹீமினுடைய வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். பிறகு சங்கீதாவிடமும் விசாரிக்கிறார். ரஹீம்-சங்கீதாவின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால் சங்கீதாவினுடைய தந்தை கொலை செய்திருக்கலாம் என சிவா எண்ணுகிறார். பின்பு சிவாவினுடைய மனைவியன் உடலில் ரஹீமினுடைய ஆன்மா புகுந்துவிடுகிறது. இறுதில் புறா போட்டியின் ஒருங்கிணைப்பாளர்தான் ரஹீமினுடைய தொடர்ச்சியான வெற்றியினால் அவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என்பதை சிவலிங்கேஸ்வரன் கண்டுபிடிக்கிறார். தயாரிப்புகன்னட மொழியில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான சிவலிங்கா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழிலும் மறு ஆக்கம் செய்தார். சந்திரமுகி (திரைப்படம்) போன்றே ஒரு படத்தை எடுப்பதற்காக அதில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க ரசினிகாந்த்திடம் கேட்டுக்கொண்டார்.[3] பிறகு அந்தப் படத்தில் நடிப்பதற்காக அஜித் குமாரிடம் கேட்டதாகத் தகவல் உள்ளது.[4] மார்ச், 2016 ஆம் ஆண்டில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்புக் கொண்டார். பிறகு வடிவேலு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். பெண் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அனுசுக்கா செட்டி மற்றும்ஹன்சிகா மோட்வானியிடம் கேட்டனர். அவர்கள் மறுக்கவே ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்தனர். தனது மகன் சக்தியை முக்கியக் கதாப்பாத்திரத்தில் (ரஹீம்) நடிக்க வைத்தார். கன்னடத் திரைப்படத்தை விட தமிழ் திரைப்ப்டத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என சக்தி கூறியுள்ளார்.[5] இந்தத் திரைப்படத்தின் துவக்கவிழாவானது சூலை, 2016 இல் நடந்தது.[6] ஆகஸ்டு, 2016 இல் பெங்களூருவில் படப்பிடிப்பு முடிவடைந்தது.[7] சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia