பானுப்ரியா கவுசல்
பிறப்பு சனவரி 15, 1966 (1966-01-15 ) (அகவை 59) ஆந்திரப் பிரதேசம் , இந்தியா வாழ்க்கைத் துணை ஆதர்ஷ் கவுசல்
பானுப்ரியா (தெலுங்கு : భానుప్రియ ) ஓர் இந்திய நடிகை. இவர் 1980 முதல் - 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[ 1] [ 2] [ 3]
ஆரம்ப காலம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15 , 1966 ஆண்டு பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.
இவருடைய தங்கை நிசாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிசாந்தி 2002-ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான் -லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தொழில் வாழ்க்கை
பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும், சில மலையாளத் திரைப்படங்களிலும், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய 17-ஆவது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன் காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.
சொந்த வாழ்க்கை
அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல் என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
திரைப்படங்கள்
தமிழ்
அனைத்து மொழித் திரைப்படங்கள்
வருடம்
திரைப்படம்
நடிப்பு
மொழி
குறிப்புகள்
1983
மெல்ல பேசுங்கள்
வசந்த்
தமிழ்
Sitara
சுமன்
தெலுங்கு
1984
Rowdy
Krishnam Raju
தெலுங்கு
Ramayanamlo Bhagavatham
Chandra Mohan
தெலுங்கு
Palnati Puli
பாலகிருஷ்ணா
தெலுங்கு
Jamesbond 999
சுமன்
தெலுங்கு
Chadarangam
Narehs
தெலுங்கு
Gruhalakshmi
மோகன் பாபு
தெலுங்கு
Illale Devatha
Akkineni Nageshwara Rao
தெலுங்கு
1985
தென்றல் தொடாத மலர்
ராஜீவ்
தமிழ்
Jhansi Rani
Rajendra Prasad
தெலுங்கு
Mogudu Pellalu
நரேஷ்
தெலுங்கு
Musugu Donga
சுமன்
தெலுங்கு
Bangaru Chiluka
Arjun Sarja
தெலுங்கு
Preminchu Pelladu
Rajendra Prasad
தெலுங்கு
Jwala
Chiranjeevi
தெலுங்கு
Garjana
சுமன்
தெலுங்கு
Kutumba Bandham
ராஜேஷ்
தெலுங்கு
Illaliko Pariksha
Mohan Babu
தெலுங்கு
Athmabalam
Balakrishna Nandamuri
தெலுங்கு
Filming
America Alludu
சுமன்
தெலுங்கு
Anveshana
கார்த்திக்
தெலுங்கு
சிரஞ்சீவி (நடிகர்)
Chiranjeevi
தெலுங்கு
Vijetha
Chiranjeevi
தெலுங்கு
1986
Dosti Dushmani
Rishi Kapoor, Jeetendra, Rajini Kanth
இந்தி
Manchi Manasulu
Bhanuchandar
தெலுங்கு
Filming
Prathibavanthudu
கிருஷ்ணா
தெலுங்கு
Debut Film
Konaseema Kurradu
Arjun Sarja
தெலுங்கு
Kashmora
Rajasekhar, Rajendra Prasad
தெலுங்கு
Aalapana
மோகன்
தெலுங்கு
Apoorva Sahodarulu
பாலகிருஷ்ணா
தெலுங்கு
Anadiga Aadadi
Rajendra Prasad
தெலுங்கு
Anasuyammagari Alludu
Balakrishna Nandamuri
தெலுங்கு
1987
Insaf Ki Pukar
Dharmendra, Jeetendra
இந்தி
Khudgarz
Jeetendra, Shatrughan Sinha
இந்தி
Srinivasa Kalyanam
Venkatesh
தெலுங்கு
Shankaravam
கிருஷ்ணா
தெலுங்கு
Prema Samrat
சுமன்
தெலுங்கு
Prema Deepalu
Sarath Banu
தெலுங்கு
Chakravarthy
Chiranjeevi
தெலுங்கு
Donga Mogudu
Chiranjeevi
தெலுங்கு
Jebu Donga
Chiranjeevi
தெலுங்கு
Allari Krishnayya
பாலகிருஷ்ணா
தெலுங்கு
1988
Mar Mitenge
Jeetendra, Mithun Chakraborty
இந்தி
Tamacha
Jeetendra, Rajini Kanth
இந்தி
Bharathamlo Balachandrudu
பாலகிருஷ்ணா
தெலுங்கு
Special Song
Nyayaniki Siksha
Shiva Krishna
தெலுங்கு
[[Thiragabadda தெலுங்கு Bidda]]
Balakrishna Nandamuri
தெலுங்கு
Khaidi No 786
Chiranjeevi
தெலுங்கு
Trinetrudu
Chiranjeevi
தெலுங்கு
Swarnakamalam
Venkatesh
தெலுங்கு
AgniKeratalu
கிருஷ்ணா
தெலுங்கு
1989
Dav Pech
Jeetendra
இந்தி
Garibon Ka Daata
Mithun Chakraborty
இந்தி
Special Song
Kasam Vardi Ki
Jeetendra
இந்தி
Suryaa : An Awakening
Vinod Khanna
இந்தி
ஆராரோ ஆரிரரோ
K. Bhagyaraj
தமிழ்
State Rowdy
Chiranjeevi
தெலுங்கு
Bhagawan
Krishnam Raju
தெலுங்கு
Special Appearance
Black Tiger
Ramesh Babu
தெலுங்கு
Gudachari 117
Krishna
தெலுங்கு
Asokha Chakravarty
Balakrishna Nandamuri
தெலுங்கு
1990
Zahreelay
Sanjay Dutt, Jeetendra
இந்தி
சிறையில் பூத்த சின்ன மலர்
விசயகாந்த்
தமிழ்
Jayasimha
சுமன்
தெலுங்கு
1991
Bhabhi
Govinda, Juhi chawla
இந்தி
Special Song
புது மனிதன்
சத்யராஜ்
தமிழ்
கோபுர வாசலிலே
கார்த்திக்
தமிழ்
சத்திரியன்
விசயகாந்த்
தமிழ்
பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கனும்
Chandrasekhar
தமிழ்
அழகன்
Mammootty
தமிழ்
பிரம்மா
சத்யராஜ்
தமிழ்
தளபதி
Rajinikanth
தமிழ்
தைப்பூசம்
நாசர்
தமிழ்
Sri Yedu Kondala Swamy
Arun Govil
தெலுங்கு
People's Encounter
Srikanth
தெலுங்கு
Ramudu Kadu Rakshasudu
சுமன்
தெலுங்கு
1992
Rajashilpi
Mohanlal
மலையாளம்
மகுடம்
சத்யராஜ்
தமிழ்
பரதன்
விசயகாந்த்
தமிழ்
தெற்கு தெரு மச்சான்
சத்யராஜ்
தமிழ்
சுந்தர காண்டம்
K. Bhagyaraj
தமிழ்
பங்காளி
சத்யராஜ்
தமிழ்
அமரன்
கார்த்திக்
தமிழ்
காவிய தலைவன்
விசயகாந்த்
தமிழ்
வானமே எல்லை
Anand Babu, Ramya Krishnan
தமிழ்
நீங்க நல்லா இருக்கனும்
Nizhalgal Ravi
தமிழ்
1993
கட்டளை
சத்யராஜ்
தமிழ்
பொறந்த வீடா புகுந்த வீடா
Sivakumar
தமிழ்
மகராசன்
Kamalhassan
தமிழ்
முற்றுகை
Arun Pandiyan, Ranjitha
தமிழ்
கோகுலம்
Arjun Sarja
தமிழ்
உழவன்
Prabhu Ganesan
தமிழ்
ராஜ துரை
விசயகாந்த்
தமிழ்
Bhagath
Suman
தெலுங்கு
Kirayi Gunda
Krishna
தெலுங்கு
1994
Rasika
Ravichandran
கன்னடம்
Ish Gup Chup
Varun Kumar
தெலுங்கு
Bangaru Mogudu
சுமன்
தெலுங்கு
1995
நெடுஞ்சாலை
Suresh Gopi
மலையாளம்
சக்கரவர்த்தி
Karthik
தமிழ்
Pedharayudu
Mohan Babu
தெலுங்கு
1996
Azhakiya Ravanan
Mammotty
மலையாளம்
1996Amma Durgamma
Sasikumar, Ooha
தெலுங்கு
1997
Kulam
Suresh Gopi
மலையாளம்
Rishyasringan
Krishna, Shyjudev
மலையாளம்
Mama Bagunnava
Rajendra Prasad, Naresh
தெலுங்கு
அன்னமாச்சாரியார்
Akkineni Nagarjuna, Suman
தெலுங்கு
1998
தலைமுறை
Rajkiran
தமிழ்
ஆஹா
Raghuvaran
தமிழ்
Aaha
Jagapati Babu
தெலுங்கு
1999
என்றென்றும் காதல்
Vijay
தமிழ்
ஆனந்த போர்க்களமே
Karthik
தமிழ்
2000
Kochu Kochu Santhoshangal
Jayaram, Lakshmi Gopalaswamy
மலையாளம்
Nandi Award for Best Actress
தேவர்மகள்
Shivrajkumar, Ambareesh
கன்னடம்
அன்னை
தமிழ்
February 14, Necklace Road
Suman
தெலுங்கு
Jayam Manadera
Venkatesh
தெலுங்கு
Ayodhya Ramaiah
Srihari
தெலுங்கு
2001
சிறீ ராஜ ராஜேசுவரி
Ramya Krishnan
தமிழ்
தாலி காத்த காளியம்மன்
Prabu
தமிழ்
2002
Simhadriya Simha
Vishnuvardan
கன்னடம்
நைனா
Jayaram
தமிழ்
Lahiri Lahiri Lahirilo
HariKrishna, Suman
தெலுங்கு
2004
Manjupoloru Penkutti
Amrutha Prakash, Suresh Krishna
மலையாளம்
Kadamba
Vishnuvardan
கன்னடம்
[[ஜெய் (2004 தமிழ் film)|ஜெய்]]
Prashanth, Thyagarajan
தமிழ்
ஜோர்
சத்யராஜ், Sibiraj, Gajala
தமிழ்
செல்லமே
Vishal Krishna, Reema sen
தமிழ்
Sravanamasam
Harikrishna, Krishna, Gajala
தெலுங்கு
2005
Hridayathi Sookshikkaan
Kunchako Boban, Bhavana
மலையாளம்
Orey Pandu
Sachin
தெலுங்கு
Chatrapathi
Prabhas, Shriya
தெலுங்கு
2006
Gautam S.S.C
Navadeep, Sindhu Tolani
தெலுங்கு
2007
ஒரு பொன்னு ஒரு பையன்
தமிழ்
பொல்லாதவன்
தனுஷ்
தமிழ்
2008
Theekuchi
தமிழ்
Nandi Award for Best Supporting Actress
Mahayagnam
Nazer
தெலுங்கு
pelliayindhikani
Allari Naresh, Kamalini Mukherjee
தெலுங்கு
2009
Meshtru
Devaraj
கன்னடம்
2010
My Name is Amrutha
Bhanuchander
தெலுங்கு
Nandi Award for Best Supporting Actress
2012
Kattu Paranja Katha
மலையாளம்
Chatrapati
கன்னடம்
Devathalu
Rishi
தெலுங்கு
2012
என் பெயர் குமாரசாமி
தமிழ்
படப்பிடிப்பில்
Dammu
Junior NTR
தெலுங்கு
படப்பிடிப்பில்
1980s
Shravana Meghaalu
Muralimohan, Lakshmi
தெலுங்கு
தொலைக்காட்சிகளில்
விருதுகள்
1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது
1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது
1989-ம் வருடத்திற்கான, ஆராரோ ஆரிராரோ திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
1991-ம் வருடத்திற்கான, அழகன் திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
1996-ம் வருடத்திற்கான, பெத்தராயுடு திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2002-ம் வருடத்திற்கான, லஹிரி லஹிரி லஹிரிலோ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
2005-ம் வருடத்திற்கான, சத்ரபதி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
1972–1980 1981–2000 2001–2018 2020– தற்போது