சீதக்கா
தன்சாரி அனசுயா (பிறப்பு: சூலை 9, 1971), பொதுவாக சீதக்கா (Seethakka) என்று அழைக்கப்படுபவர், தற்போது தெலங்காணாவில் அமைச்சராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலங்காணா சட்டமன்றத்தில் முலுக் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும், 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தெலங்காணா சட்டமன்றத்திற்கும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சூன் 2018-ல் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் ஆகத்து 2019-ல் சத்தீசுகர் மகளிர் காங்கிரசின் மாநிலப் பொறுப்பாளராக ஆனார். இவர் 'தெலங்காணாவின் இரும்புப் பெண்மணி' என்று குறிப்பிடப்படுகிறார். இளமைசீதக்கா ஜக்கனகுடெம் கிராமத்தில் ஆதிவாசி கோயா பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அனசுயா நக்சலைட் ஆனார். 1987ஆம் ஆண்டு தனது 14வது வயதில் ஜனசக்தி நக்சல் குழுவில் சேர்ந்தார். இவருக்கு இந்த இயக்கத்தில் கிடைத்த ஏமாற்றத்தின் காரணமாக பதினோர் வருட காலத்திற்குப் பிறகு இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1997ஆம் ஆண்டு பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் இவர் காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் இவர் படிப்பைத் தொடர்ந்தார், வழக்கறிஞரானார். 2022-ல், சீதக்கா தனது முனைவர் பட்ட ஆய்வினை உசுமானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முடித்தார்.[1][2] அரசியல் வாழ்க்கை2004ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து முலுக் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தபோது, முதலில் அரசியலில் நுழைந்தார் அனசுயா. 2009ல் மீண்டும் முலுக் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, காங்கிரசு வேட்பாளர் போடம் வீரையாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2014 தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி வேட்பாளர் அசுமீரா சந்துலாலிடம் தோல்வியடைந்தார். 2017ஆம் ஆண்டில், அனசுயா தெலுங்கு தேசம் கட்சியை விட்டு வெளியேறி இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். விரைவில் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் பின்னர் சத்தீசுகர் மகளிர் காங்கிரசின் மாநிலப் பொறுப்பாளராகவும் ஆனார். இவர் 2018 மற்றும் 2023 முலுக் தொகுதிக்கான சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 7 திசம்பர் 2023 அன்று, தெலங்காணாவின் அமைச்சராகப் பதவியேற்றார். பொது அடைப்பின் போது நிவாரணம்அனசுயா 2020ஆம் ஆண்டில் தெலங்காணா-சத்தீசுகர் எல்லைக்கு அருகிலுள்ள 400 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொது அடைப்பின் போது உள்ளூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார், அரிசி, பருப்பு போன்றவற்றை விநியோகித்தார், தேவையான மக்களுக்குப் பொருட்கள் மற்றும் முகமூடிகளை விநியோகித்தார். இவரது முயற்சிகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றன, "என் சொந்த திருப்திக்காக, எனது மக்களுக்கு எனது கடமையாக இதைச் செய்கிறேன்" என்று அனசூயா கூறினார். “ஆளும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. நன்கொடைகள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவின் காரணமாக என்னால் இதையெல்லாம் செய்ய முடிந்தது எனத் தெரிவித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia