சீர்மரபினர் (Denotified Tribes) தரிசு நிலங்களில் சிறு தானிய பயிர்த் தொழில் செய்வதுடன் களவு, வழிப்பறி, கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை, ஆங்கிலேயே அரசால் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்ட மக்கள் ஆவர். இந்திய விடுதலைக்குப் பின் குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்கியதுடன், இந்திய அரசும் மாநில அரசுகளும், குற்றப் பரம்பரை சமூகத்தவர்களைச், சீர்மரபினர் பட்டியலில் வைத்து, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சேர்த்து 20% இட ஒதுக்கீடு செய்துள்ளது.[1]
நலத் திட்டங்கள்
சீர்மரபினர், நாடோடி இன மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தேசிய ஆணையம் அமைத்தது.[2]
மேலும் சீர்மரபினர் சமூகத்தவர்கள் வாழும் பகுதிகளில் இலவச உண்டு உறைவிடப் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகள் செயல்படுகிறது.
தமிழ்நாடு அரசு 68 சமூகத்தவர்களைப் பட்டியலில் வைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது.[3]
மேலும் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் சீர்மரபினர்களுக்கு நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.[4]
தமிழ்நாட்டுச் சீர்மரபினர்கள்
- ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
- ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
- ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
- அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
- போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
- பட்டுதுர்காஸ்
- சி. கே. குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
- சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
- சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
- தொம்பர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
- தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
- தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- தொங்கபோயர்
- தொங்கஊர் கொறச்சார்கள்
- தேவகுடி தலையாரிகள்
- தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- கொரில்லா தோட்ட போயர்
- குடு தாசரிகள்
- கந்தர்வக்கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர் , நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
- கந்தர்வக்கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- ஜோகிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஜம்பவனோடை
- காலாடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- குறவர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
- களிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கால குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கலவதிலா போயர்கள்
- கேப்மாரிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
- மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
- மொந்த குறவர்கள்
- மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
- பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
- பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
- புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டங்கள்)
- சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- சாரங்கபள்ளி குறவர்கள்
- சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
- தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
- தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
- வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
- வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- வரகநேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)[5][6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
|