சுசில் குமார்
சுஷில் குமார் (1940 - 2019) (Sushil Kumar) இந்தியக் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்தவர். கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை பூர்வீகமாக்க் கொண்ட இவர் பிறந்து, வளர்ந்தது நாகபுரியில். படிப்புபள்ளிப்படிப்பை நாகபுரியின் பிஷப் கார்டன் பள்ளி, டோராடூன் புனித ஜோசப் அகாதெமி, ஆகிய இடங்களில் முடித்து, 1956ஆம் ஆண்டு புனேயில் தேசிய பாதுகாப்பு அகதெமியில்,கடற்படை வீரராகப் பயிற்சியில் சேர்ந்து நிறைவு செய்தார், கடற்படையில்1961இல் கடற் படை அதிகாரியானார். கடற் படையில் இவர் தேர்ந்தெடுத்து தாக்குதல் பிரிவை. கோவாவை விடுவிப்பதற்காக 1961ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை தாக்குதலில் பெரும்பங்கு வகித்தார். அதே போன்று 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான் போரின்போது, கராச்சி துறைமுகத்தை இந்தியா செயலிழக்கச் செய்தது. இதிலும் தலைமை பொறுப்பெடுத்து முக்கிய பங்காற்றினார். இலங்கையில் போராளி குழுக்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலகட்டத்தில் ஒரு குழு மாலத்தீவை தாக்க முயன்றபோது. அந்நாடு இந்தியாவின் உதவியை நாடியது. இதையடுத்து சுஷில் குமார் தலைமையில் அனுப்பபட்ட இந்திய கடற்படைப் பிரிவு, போராளிகளைக் கைது செய்தது. (காக்டஸ் நடவடிக்கை) கடற்படை தலைமைத் தளபதிசப் லெப்டினட் ஆகக் கடற்படையில் சேர்ந்த இவர் 1998 டிசம்பரில் அட்மிரல் ஆகப் பதவி உயர்வு பெற்று, இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதியாகப் பொறுப் பேற்றார்.[1] விருதுகள்தீரச் செயலுக்கான நவ சேனை விருது, உத்தம யுத்த சேவை விருது, பரம் வசிஷ்ட் சேவை விருது. ஆகிய விருதுகளைப் பெற்றவர். மிகச்சிறந்த கோல்ப் வீரரான சுஷில், சர்வ தேச அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia