சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில்

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் is located in ஆந்திரப் பிரதேசம்
அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்
பள்ளிகொண்டீசுவரர் கோயில், சுருட்டப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று:13°20′04″N 79°52′29″E / 13.3344°N 79.8748°E / 13.3344; 79.8748
பெயர்
பெயர்:அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சுருட்டப்பள்ளி
மாவட்டம்:சித்தூர்
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வால்மீகிஸ்வரர்
உற்சவர்:பள்ளி கொண்டீஸ்வரர்
தாயார்:மரகதாம்பிகை
உற்சவர் தாயார்:அமுதாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:--
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:மகாபிரதோஷம்

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் என்பது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் மண்டல், சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

தல சிறப்பு

சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்.

மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர்.

பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

தல வரலாறு

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், "சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்"என மன்றாடினர்.

உடனே சிவன் 'விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.

சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது தொண்நம்பிக்கை.

இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில், ஆலகால விஷம் உண்டபின்னர், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

இந்தக் கோயிலில் குபேரனிடம் உள்ள சங்கநிதி, பாற்கடலில் தோன்றிய பத்மநிதி இருவரும் தத்தம் மனைவியரோடு தரிசனமளிக்கின்றனர்.

தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.

வழிபடும் முறை

இத்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் மரகதாம்பிகை. முதலில் மரகதாம்பிகையை வழிபட்ட பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்.

பிரதோசம்

பிரதோச பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது தொண்நம்பிக்கை.

அமைவிடம்

சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் சுருட்டப்பள்ளி எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-15. Retrieved 2013-11-19.
  2. பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் – சுருட்டப்பள்ளி

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya