ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் ஊத்துக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,740 (2011)

1,593/km2 (4,126/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/uthukottai

ஊத்துக்கோட்டை (ஆங்கிலம்:Uthukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலமையிடமும் பேரூராட்சியும் ஆகும். ஊத்துக்கோட்டை நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

இப்பேருரராட்சி தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஆந்திர மாநில எல்லையும், கிழக்கில் சென்னையும், தெற்கில் மாவட்டத் தலைமையிடம் திருவள்ளூர் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 118 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,244 வீடுகளும், 12,740 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.98% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஊத்துகோட்டை பேரூராட்சியின் இணையதளம்
  5. Uthukkottai Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya