சுரேந்திர சௌராசியா
சுரேந்திர சௌராசியா (Surendra Chaurasia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் குசாகரி என்னும் ஊரில் பிறந்தார். ஒரு விவசாயியாக இருந்த இவர் பாரதிய சனதா கட்சியின் அரசியல்வாதியாக மாறினார்.[2] உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[3] ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்உத்தரபிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதியில் உள்ள குசாகரியில் வசிக்கும் சுரேந்திர சௌராசியா, இந்து யுவ வாகினி அமைப்பின் மூலம் அரசியலைத் தொடங்கினார். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வாக்குமூலத்தின்படி இவரது தொழில், விவசாயம் மற்றும் வணிகம் ஆகும்.[4] மூத்த வேட்பாளரான கசாலா லாரியை தோற்கடித்ததன் மூலம் உத்தரபிரதேச சட்டமன்றத்தில் இளைய சட்டமன்ற உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia