ராம்பூர், உத்தரப் பிரதேசம்
ராம்பூர் (Rampur) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில், மொராதாபாத் கோட்டத்தில் அமைந்த இராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் இசுலாமிய நவாப்புகள் ஆண்ட இராம்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. 2011-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 3,25,248 ஆகும்.[1] இந்நகரம் இசுலாமிய மக்கள் பெரும்பான்மை கொண்ட நகரம் ஆகும்.[2] ![]() மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராம்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,25,248 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 53.7% ஆக உள்ளது. மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 37,945 (11.7%) ஆக உள்ளனர். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[5] போக்குவரத்துதொடருந்து![]() லக்னோ-மொராதாபாத் இருப்புப் பாதையில் அமைந்த இராம்பூர் தொடருந்து நிலையம்[6] மூன்று நடைமேடைகளைக் கொண்டது. இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதிகளை தொடருந்துகள் மூலம் இணைக்கிறது. இதனருகில் உள்ள சந்திப்பு தொடருந்து நிலையம் 30 கி.மீ. தொலைவில் உள்ள மொராதாபாத்தில் உள்ளது. சாலைப் போக்குவரத்துபஞ்சாப் மாநிலத்தின் மலௌத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட்டிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9 இராம்பூர் வழியாகச் செல்கிறது.[7] வானூர்தி நிலையம்ராம்பூருக்கு அருகமைந்த வானூர்தி நிலையங்கள்:-
தட்ப வெப்பம்இராம்பூர் நகரத்தின் கோடைக்கால வெப்பம் 43 °C முதல் 30 °C வரை இருக்கும். குளிர்கால வெப்பம் 25 °C to 5 °C வரை இருக்கும்.[8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia